Don't Miss!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- News
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சில சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்..சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புல்லரிக்க வைத்த மணிரத்னம்.. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் குறித்து பேசிய ஜெயம் ரவி!
சென்னை : விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
Recommended Video
இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் டைரக்ட் செய்துள்ளார்.
அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்
இந்தப் படத்தின் டீசர் வெளியீடு நேற்று மாலை மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மல்ட்டி ஸ்டாரர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியீடு நேற்றைய தினம் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது. இந்த டீசரை ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை கொண்டு படக்குழு வெளியிட்டது.

முன்னணி நடிகர்கள் வெளியிட்ட டீசர்
சூர்யா, அமிதாப் பச்சன், மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் இந்த டீசரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஏஆர் ரஹ்மான், சரத்குமார், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று விழாவை சிறப்பித்து படம் குறித்த கருத்துக்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.

சிறப்பான வரவேற்பு
படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் இத்தகைய பிரம்மாண்ட முயற்சிகள் அதிகமாக இல்லாத நிலையில், இந்தப் படம் அந்தக் குறையை பூர்த்தி செய்துள்ளது. கல்கியின் இந்த நாவல் காலத்தால் அழியாத புகழ் பெற்றது. அந்த நாவலை காட்சி வடிவமாக இளைய தலைமுறையினருக்கு கொடுக்கும் மணிரத்னத்தின் இந்த முயற்சி கண்டிப்பாக சிறப்பான வரவேற்பை பெறும்.

பெருமையை அளித்த படம்
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, த்ரிஷா, மணிரத்னம் உள்ளிட்டவர்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பேசினர். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, இந்தப் படத்தை ரசிகர்களுக்கு வழங்குவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார். தொடர்ந்து இந்தப் படம் தங்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி
மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் ஒருமுறை தவறவிட்டதாகவும் அதற்காக திட்டுவதற்காகத்தான் தன்னை அவர் அழைத்தார் என்று நினைத்து அவரது அலுவலகத்திற்கு சென்றதாகவும் ஆனால் நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று அவர் கூறியதைக் கேட்டதும் தனக்கு புல்லரித்ததாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

புல்லரித்த தருணம்
இந்த மேடையை விட அந்த தருணம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார். இந்த புத்தகத்தை பல ஆயிரம் பேர் படித்திருக்கிறார்கள்.. பேசியுள்ளார்கள். ஆனால் ஒரே ஆளாக இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்கியுள்ள மணிரத்னம் சாருக்கு தான் தலைவணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நனவான கனவு
பல காரணங்களால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு முயற்சியை நடத்திக் காட்டியுள்ளார் மணிரத்னம் என்றும் ஜெயம் ரவி பாராட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகியதன்மூலம் பலரின் கனவு நனவாகியுள்ளதாகவும், தங்களின் கனவும் இந்தப் படத்தின்மூலம் நனவாகியுள்ளதாகவும் ஜெயம் ரவி மேலும் கூறினார்.