மணிரத்னத்தின் முத்திரையை பதிக்கும் பொன்னியின் செல்வன்... மனம் உருகிய பிரபல நடிகர்

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பற்றிய தனது அனுபவங்களை மனம் திறந்து பேசி உள்ளார் நடிகர் ஜெயராம். இதனால் படத்தின் மீதான ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்து என்ன தகவல் படம் பற்றி வெளிவர உள்ளது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

2022 ல் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றில் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன். மிகப் பெரிய வரலாற்று காவியமான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.

டிரெண்டான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

டிரெண்டான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கடந்த மாதம் முக்கிய கேரக்டர்களின் ஃபர்ஸ்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, செம வைரலாகின. இன்னும் யாரெல்லாம் எந்தெந்த ரோல்களில் நடிக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இந்திய திரையுலகை சேர்ந்த மிக பிரபலமான நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா

டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா

பான் இந்தியன் படமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது VFX பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமம் மிக அதிகபட்சமாக ரூ.125 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும். பிரபலமான ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் இரு பாகங்களின் டிஜிட்டல் உரிமத்தையும் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

சோழர்களின் ஆட்சி காலம் பற்றி பேசும் பொன்னியின் செல்வன் படத்தில் தனது ரோல் பற்றி ஓப்பனாக பேசி உள்ளார் நடிகர் ஜெயராம். இந்த படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி ரோலில் தான் ஜெயராம் நடித்துள்ளார். படத்தின் நடித்த அனுபவம், தனது ரோல் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயராம் கூறுகையில், டைரக்டர் மணிரத்னத்தின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்தியாவில் உள்ள அத்தனை நடிகர்களுக்கும் இருக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மிகப் பெரிய அதிர்ஷ்டம். மிகப் பெரிய வாழ்நாள் சாதனை.

மணிரத்னத்தின் முத்திரையை பதிக்கும்

மணிரத்னத்தின் முத்திரையை பதிக்கும்

மணிரத்னம் படத்தில் இருப்பதை போல் வேறு எந்த சினிமா செட்டிலும் இப்படி ஒரு ஒழுக்கத்தை நான் பார்த்ததே இல்லை. ஷுட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து சரியாக 6 மணிக்கே ஷாட்டுக்கு தயாராகி விடுவார்கள். பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் முத்திரையை பதிக்கும் படமாக இருக்கும் என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 16வது படம்

ஏ.ஆர்.ரஹ்மானின் 16வது படம்

இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 16வது படம் இதுவாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X