»   »  கார் மீது தாக்குதல்: நடிகர் காயம்- கண் பார்வை பறிபோகும் அபாயம்

கார் மீது தாக்குதல்: நடிகர் காயம்- கண் பார்வை பறிபோகும் அபாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: பாலிவுட் நடிகர் ஜீத்து வர்மா சென்ற கார் தாக்கப்பட்டதில் அவர் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதில் அவர் கண் பார்வை பறிபோகும் என்று அஞ்சப்படுகிறது.

பாலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜீத்து வர்மா(49). பல குதிரைகளுக்கு சொந்தக்காரர். குதிரையேற்ற பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.

பாலிவுட் பிரபலங்கள் குதிரையேற்ற காட்சிகளில் நடிக்க பயிற்சியும் அளிக்கிறார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ஜீத்து வர்மா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபுவுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரில் ஜெய்பூர் கிளம்பியுள்ளார். சிட்டோர்கார் அருகே காட்டுப் பகுதியில் கார் வந்துள்ளது.

தாக்குதல்

தாக்குதல்

காரில் டிரைவர் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார் ஜீத்து. அப்போது திடீர் என்று உள்ளூர்வாசிகள் சிலர் கார் மீது கற்களை வீசித் தாக்கினர். இதையடுத்து டிரைவர் காரின் வேகத்தை அதிகரித்தும் பலனில்லை.

காயம்

காயம்

உள்ளூர்வாசிகள் வீசிய கற்களில் ஒன்று காரின் வின்ட் ஷீல்டில் பட்டு அது உடைந்தது. மேலும் அந்த கல் ஜீத்துவின் வலது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டது.

மும்பை

மும்பை

ஜீத்து தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வலது கண்ணில் பார்வை பறிபோகக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Jeetu Varma is seriously injured in his right eye after some locals pelted stones at his car in Rajasthan. Doctors fear that Jeetu might lose sight in the right eye.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil