»   »  நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மிரட்டல்... நடிகர் ஜீவா குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மிரட்டல்... நடிகர் ஜீவா குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு வரும் பணத்திற்கு கணக்கு காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பியதால், சீமானின் தொண்டர்கள் மிரட்டல் கொடுத்து வருவதாக நடிகர் ஜீவா குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக ,கபாலி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று ரஜினி தெரிவிப்பாரா என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

Actor Jeeva appeals to Seeman to advise his followers

அதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, நாம் தமிழர் கட்சிக்கு வரும் பணத்திற்கு சீமான் கணக்கு காட்டுவாரா என்று கேட்டிருந்தார்

அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் ஜீவாவுக்கு தொலைபேசியில் அழைத்து ஆபாசமாகவும், மிரட்டல் கொடுத்தும் பேசுகிறார்களாம்.

இந்த மிரட்டல் தொடர்பாக சீமானுக்கு, ஜீவா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு... சில தினங்களுக்கு முன்பு கபாலி படத்தின் சம்பளத்தை கணக்கு காட்ட ரஜினிகாந்த் அவர்களால் முடியுமா என்று நீங்கள் கேட்டதற்கு, உங்கள் கட்சிக்கு வரும் பணத்திற்கு உங்களால் கணக்கு காட்டமுடியுமா என்று ஒரு ரசிகனாக தலைவர் திரு.ரஜினிகாந்த அவர்களின் ஆதரவாளராக நான் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்

அது முதல் உங்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள் அதில் சிலர் தவறாகவும் மரியாதைக்குறைவான வார்த்தைகளில் பேசுவது வருத்தமளிக்கிறது.

இது தமிழர் பண்பாடும் அல்ல... ஆகையால் உங்களின் சில தம்பிகளுக்கு நீங்கள் விமர்சனங்களை பொது மேடையில் விவாதிப்பது மட்டுமே அரசியல் நாகரீகம் என்பதை சொல்லுங்கள் என அன்புடன் கேட்டு கொள்கிறேன் .. நன்றி. ஜீவா..." என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பெரும்பாலும் வெளிநாட்டில் வசிக்கும் சீமானின் ஆதரவாளர்கள்தான் இதுபோல மிரட்டி வருவதாக ஜீவா தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து இன்னும் காவல் துறையினரிடம் ஜீவா புகார் எதுவும் அளிக்கவில்லை என தெரிகிறது. சமீபத்தில் தான் ரஜினியை, தமிழருவி மணியனுடன் சென்று சந்தித்து வந்தார் ஜீவா என்பது குறிப்பிடத் தக்கது.

English summary
Actor Jeeva has appealed to Seeman, asking to advise his Naam Tamilar party men, to stop abusing him over phone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil