»   »  நல்லா சாப்பிட்டு, தூங்கி, சண்டை போடுவதற்கு பதில்...: பிக் பாஸை வறுத்தெடுத்த நடிகர் ஜீவா

நல்லா சாப்பிட்டு, தூங்கி, சண்டை போடுவதற்கு பதில்...: பிக் பாஸை வறுத்தெடுத்த நடிகர் ஜீவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை ஃபேஸ்புக்கில் விமர்சித்துள்ளார் நடிகர் ஜீவா.

கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கழவிக் கழுவி ஊத்தி வருகிறார்கள். நிகழ்ச்சியை உடனே நிறுத்துமாறும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ஜீவாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்துள்ளார்.

பிக் பாஸ்

"பிக் பாஸ்" நூறுநாள் வேலைத்திட்டத்தில் உண்பது, உறங்குவது, சண்டை போடுவது என்று இல்லாமல் மரம் நடுதல் ,குளங்கள் தூர்வாருதல் போன்ற நிகழ்வுகள் இருந்திருந்தால் அது சமூகத்திற்கு பயனுள்ளதாகவாது இருந்திருக்கும் !! என ஜீவா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடு

நாடு

அந்த மாதிரில்லாம் யோசித்தால் நாமளும் நாடும் உருப்பட்டுருமே..! என்று ஜீவாவின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

அது எப்படி ? நாங்க நிகழ்ச்சி போடுவதே விளம்பரத்திற்காக தான் , நல்லதை நாங்க எதுக்கு செய்யனும் என மற்றொருவர் கிண்டலாக கமெண்ட் போட்டுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நீங்கள் சொல்வது போன்று செய்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் ஜீவா என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Jeeva has criticised Big Boss programme on Facebook. He has given some suggestion to make the programme a meaningful one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil