»   »  நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞர்:மறைந்த நடிகர் காளையின் பல முகங்கள்

நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞர்:மறைந்த நடிகர் காளையின் பல முகங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலை தரக்குறைவாக பேசினாலும் ஈகோ இல்லாதவர் என விஷால் தரப்பாலேயே பாராட்டப்பட்டவர் பழம்பெரும் நடிகர் கே.என். காளை.

நடிகர் சங்க தேர்தலின்போது நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து விஷால் அணியினரை தரக்குறைவாக பேசினார் நடிகர் கே.என். காளை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக விஷால் காளை மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

Actor Kaalai and his other faces

விஷால் அணியினரை வசைபாடி அவர்களின் கோபத்திற்கு ஆளான ராதாரவியும், காளையும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது செய்த ஒரு காரியம் அனைவரையும் வியக்க வைத்தது.

நடிகர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு விஷால் அணியினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். காளை நிவாரணப் பொருட்கள் வழங்கிய இடத்திற்கு வந்து வரிசையில் நின்று அதை வாங்கிச் சென்றார்.

ராதாரவி பெரும் பணக்காரர் என்றாலும் வம்பு எதற்கு என தனது மகனை அனுப்பி நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொண்டார். தங்கள் அணியை கடுமையாக விமர்சித்த காளை நேரில் வந்து அதுவும் வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கியதில் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி.

பழம்பெரும் நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞரான அவர் ஈகோ பார்க்காமல் நிவாரணப் பொருட்களை வாங்கியதில் மகிழ்ச்சி, அவருக்கு சல்யூட் அடிக்கிறேன் என பொன்வண்ணன் தெரிவித்திருந்தார்.

ஈகோ இல்லாதவர் என பெயர் எடுத்த காளை இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

English summary
Deceased KN Kaalai was not only an actor but a dubbing artist too. He even managed a drama company on his own.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil