Just In
- 1 hr ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 1 hr ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 2 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 3 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- News
4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விக்ரமுடன் எடுத்த அரிய புகைப்படம்..நடிகர் காளிதாஸின் ஸ்வீட் மெமரீஸ் !
சென்னை : சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமான இவர் இப்பொழுது தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் சிறுவயதில் விக்ரமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகன் காளிதாஸ்
மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ஜெயராம் தமிழிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்க, தமிழ் நாட்டிலும் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. சரளமாக தமிழ் பேசக்கூடிய மலையாளப் நடிகர்களிலேயே அனைவரின் விருப்பமானவராக இருக்கும் ஜெயராமனின் மகன் காளிதாஸ் இப்பொழுது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஹீரோவாக அறிமுகம்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட காளிதாஸ் எக்கச்சக்கமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் நிலையில் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

பலரையும் கவனிக்க வைத்தது
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள காளிதாஸ் ஜெயராமுக்கு அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி திரைப்படங்களாக மகுடம் சூடி வரும் நிலையில் சமீபத்தில் தமிழில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் காளிதாஸின் நடிப்பு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

திருநங்கையாக வாழ்ந்து
சுதா கொங்கரா,வெற்றிமாறன்,விக்னேஷ் சிவன், கெளதம் மேனன் ஆகிய நான்கு முன்னணி இயக்குனர்கள் இயக்கியிருந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் தங்கம் என்ற பகுதியை சுதா கொங்கரா இயக்கி இருக்க அதில் சதார் என்ற திருநங்கையாக வாழ்ந்து காட்டிய காளிதாஸ் ஜெயராமுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழில் பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெண்ட்ச் தாடியுடன்
மிகப் பெரிய திரை பின்புலத்தைக் கொண்ட காளிதாஸ் சிறுவயதில் நடிகர் விக்ரமுடன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வர அதில் விக்ரம் நீண்ட முடியுடன் பிரெண்ட்ச் தாடியுடன் வித்தியாசமாக இருக்க அருகில் மீரா ஜாஸ்மினும் இருக்கிறார்.