twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதவித் திட்டங்களில் அவர்களையும் சேருங்கள்.. கவலையின்றி பசியாறுவர்.. நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை!

    |

    சென்னை: அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களையும் இசைக் குழுவினரையும் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Recommended Video

    Chennai Corporation pastes home quarantine sticker in front of Kamal's house.

    கொரோனா என்ற ஒற்றை வார்த்தை உலக மக்களையே மிரட்டி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Actor Kamal haasan requesting Tamil nadu govt

    கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்திற்கு இந்தியாவிலும் இதுவரை 19 பேர் பலியாகியிருக்கின்றனர். 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மக்களின் அன்றாட தேவைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழக அரசும் அன்றாட வேலை, தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    அதில், தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Kamal haasan requesting Tamil nadu govt to add Folk artists and orchestras troop members in aid programs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X