»   »  கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்.. விரைவில் வீடு திரும்புவார் - நடிகை கவுதமி

கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்.. விரைவில் வீடு திரும்புவார் - நடிகை கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருக்கிறார். சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 13-ந் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது அலுவலகத்தில் மாடிப்படியில் இறங்கும் போது கால் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

Actor Kamal Haasan' s fine - Gauthami

இதனையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் கடந்த 15ம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார்.

அவரை பார்ப்பதற்கு பிரபலங்கள் பலர் வரலாம் என்பதாலும், அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்ற காரணத்தினாலும் அவருக்கு தொடர்ந்து சிறப்பு பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடிகை கவுதமி, மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்டோர் மட்டுமே அவரை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கவுதமி கூறுகையில், கமல்ஹாசன் நலமுடன் இருக்கிறார். அவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனத் தெரிவித்தார்.

English summary
Actor Kamal Haasan' s fine,says actor Gauthami
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil