»   »  கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைக்கிறது.. கமல்!

கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைக்கிறது.. கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Actor Kamal haasan tweets about Ashok kumar suicide

ஆனால் சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து வாய்திறக்காமல் இருந்தார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறைமுக சாடினார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் வாயிலாக தயாரிப்பாளர் அசோக்குமாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள பதிவில் கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதாக கூறியுள்ளார்.

சட்டமும் சினிமாத்துறையும் இதனை தடுத்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது என்றும் கமல் கூறியுள்ளார். அசோக்குமாரின் குடும்பத்தாருக்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Kamal haasan tweets about Ashok kumar suicide. He said the usury interest affecting poor farmers to cinema artists, this should be stoped.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil