twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 விபத்து.. சம்பவ இடத்தில் ஆஜராக அவசியமில்லை.. கமல் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு!

    |

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பான போலீசார் விசாரணைக்கு விபத்து நடந்த இடத்திற்கு சென்று நடிகர் கமல்ஹாசன் ஆஜராகத் தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், பிரியாபவானி ஷங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்த படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத் பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு நடைபெற்றது. கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது.

    விபத்து - 3 பேர் பலி

    விபத்து - 3 பேர் பலி

    பகலில் எடுக்கப்பட வேண்டிய காட்சி ஒன்றை இரவில் பிராமாண்ட மின் விளக்குகளை பயன்படுத்தி எடுத்தனர். அப்போது இரவு 9.30 மணியளவில் படப்பிடிப்பில் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் விளக்குகள் வைக்கப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ரூ. 1 கோடி இழப்பீடு

    ரூ. 1 கோடி இழப்பீடு

    இதுதொடர்பாக நசரத் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வழக்கு மத்திய குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார். விபத்தில் இருந்து நூலிழையில் தப்பித்ததாக கூறிய நடிகர் கமல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்தார்.

    விசாரணை

    விசாரணை

    விபத்து நடந்த போது இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இயக்குநர் ஷங்கரிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல் நடிகர் கமல்ஹாசனிடமும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    துன்புறுத்துகிறார்கள்

    துன்புறுத்துகிறார்கள்

    விபத்துக்கு பிறகு இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் காவல்துறையினர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக குற்றம்சாட்டிருந்தார். நடிகர் கமல்ஹாசனின் வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சென்னை ஹைகோர்ட் இன்று பிற்பகல் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது.

    உள்நோக்கம் இல்லை

    உள்நோக்கம் இல்லை

    தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக வழக்கு தொடர்ந்தது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் கமலின் வழக்கை அவசர வழக்காக சென்னை ஹைகோர்ட் விசாரித்தது. அப்போது கமல்ஹாசனிடம் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில்தான் விசாரணை நடத்தப்படுகிறது என்றும், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

     அவசியம் இல்லை

    அவசியம் இல்லை

    அப்போது வாதிட்ட கமல் தரப்பு தான் அரசியல்வாதியாக இருப்பதால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர் என தெரிவித்தது. இதனைக் கேட்ட நீதிபதி, இந்தியன் 2 விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு நடிகர் கமல் நாளை நேரில் ஆஜராக அவசியம் இல்லை என தெரிவித்தார். மேலும் தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    நாளை செல்ல வேண்டாம்

    நாளை செல்ல வேண்டாம்

    ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் 18ஆம் தேதியான நாளை ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை சம்பவ இடத்திற்கு செல்ல அவசியம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Kamal hassan filed case against Police. Kamal says in the name of inquiry police torturing him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X