twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கரம் கோர்த்து களமாடும் ஆண்டு.. கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து

    |

    சென்னை : கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம் கோர்த்து களமாடும் ஆண்டு என்று கமலஹாசன் ட்விட்டரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் துவங்கினார். இந்த கட்சியின் தலைவராக தன்னையே அறிவித்து கொண்டார். கட்சி துவங்கியது முதல் தான் செயல்படும் ஒவ்வொரு விசயங்களிலும் அரசியல் கலந்தே செயல்பட்டு வருகிறார் கமலஹாசன் .

    Actor Kamal Hassan new year wish on twitter

    கமலஹாசன் பல அரசியல் வசனங்கள் பேசி படங்களில் நடித்து இருக்கிறார். தான் இயக்கி தானே கதை எழுதும் படங்களில் மிக ஆழமான அரசியலை பேசியிருக்கிறார் . அதை தாண்டி தற்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி அரசியலுக்கு வந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியுமிட்டார் .

    தற்போது கமலஹாசன் ட்விட்டரில் புத்தாண்டு வாழ்தை கூறியிருக்கிறார் . அதில் கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம்கோர்த்து களமாடும் ஆண்டு. நீ, நான், நாம் என அனைவரும் இணைந்து களமாடினால், பாரதி சொன்னது போல வான்புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம். இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப்பயணமும் தான். நாளை நமதே. புத்தாண்டு வாழ்த்துக்கள். என்று அரசியலுக்கு மக்களை அழைத்தும் அரசியலில் ஈடுபடுமாறும் அதனுடன் வாழ்த்துக்களை கலந்து கூறியிருக்கிறார்.

    இதே போல , பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி ரஜினிகாந்த், 2018ல் ஆண்டு கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்று உறுதியும் அளித்தார் . அதனையடுத்து பல சமூக பிரச்சனைகளை தனது பார்வையில் பேசியும் வருகிறார் ரஜினி. தற்போது ரஜினி கமலை போல் அல்லாமல் சிம்பிலாக ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் .

    பட்டப்பகலில் வெட்டவெளியில் கணவருக்கு நச்சு நச்சென லிப்லாக்.. புத்தாண்டை கிக்காக வரவேற்ற பிரபல நடிகை!பட்டப்பகலில் வெட்டவெளியில் கணவருக்கு நச்சு நச்சென லிப்லாக்.. புத்தாண்டை கிக்காக வரவேற்ற பிரபல நடிகை!

    கமல்60 நிகழ்ச்சியில் கூட பல அரசியல் நிலைபாடுகளை ரஜினி பேசியிருந்தார் . கமலை போல ரஜினியும் எப்போது அரசியல் கட்சி துவங்குவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் .பல இடங்களில் ரஜினி மீது கட்சி துவங்குவதை பற்றிய விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் அவர் அதை கருத்தில் கொள்ளாமல் சிலரின் பாராட்டையும் சிலரின் எதிர்பையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது .

    ரஜினி, கமல் இருவரும் தனித்தனியாக அரசியலுக்கு வந்தாலும், இருவரும் இணைந்தே அரசியல் கலத்தில் செயல்படுவார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். இதற்கு ரஜினி, கமல் இருவருமே தேவைபட்டால் நாங்கள் இணைவோம் என்று கூறியிருக்கின்றனர் . அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதனை பொருத்திருந்து பார்போம் .

    English summary
    Actor Kamal Hassan new year wish on twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X