twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரதமரின் சுய ஊரடங்கு கோரிக்கை.. நடிகர் கமல்ஹாசன் ஆதரவு.. ரஜினி உட்பட நண்பர்களுக்கும் அழைப்பு!

    |

    சென்னை: கொரோனாவுக்கு எதிரான பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    அரசு உத்தரவு

    அரசு உத்தரவு

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், மற்றும் மசூதிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களை மூட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கூறி வருகின்றனர்.

    பிரதமர் கோரிக்கை

    பிரதமர் கோரிக்கை

    தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் முக்கியமான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 22ஆம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    சுய ஊரடங்கு

    சுய ஊரடங்கு

    வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் 5 மணிக்கு வீட்டு வாயில்களில் நின்று கைகளை தட்டியும் மணியோசை எழுப்பியும் நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்கு பலரும் வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

    ஆதரவு தருகிறேன்

    அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நம்முடைய பிரதமரின் ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கான அழைப்புக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ரஜினிக்கு அழைப்பு

    இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு, நாம் ஒற்றுமையாகவும் வீட்டிற்குள்ளும் இருப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் நான் எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் மக்களை 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 வரை ஜனதா ஊரடங்கு எனும் மக்களின் சுய ஊரடங்குக்கு ஆதரவு தர அழைக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    English summary
    Actor Kamal hassan supports for PM Modi's Janata curfew. Kamal also calls his friends for Janta curfew on 22nd March Sunday, 7am to 9pm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X