நடிப்பின் மூலம் புதையலை விட்டு செல்கிறார்.. மறைந்த நடிகர் திலீப்குமாருக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!

சென்னை: பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் திலீப்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான திலீப்குமார் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

98 வயதான திலீப்குமார் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மூச்சு திணறல்

மூச்சு திணறல்

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திடீர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார் திலீப்குமார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று மறைவு

இன்று மறைவு

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி திலீப்குமார் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கரிசனம் மிக்கவர்..

கரிசனம் மிக்கவர்..

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.

தரமும் அர்ப்பணிப்பும்

தரமும் அர்ப்பணிப்பும்

இதேபோல் ஆங்கிலத்திலும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, திலீப்குமார் சாஹேப். என்னைப் போன்ற பல நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு தரமும் அர்ப்பணிப்பும் கற்பிக்கும் தொழில்.

புதையலை விட்டு சென்றுள்ளார்

புதையலை விட்டு சென்றுள்ளார்

உண்மையிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் இன்று நம்மை விட்டு சென்றுவிட்டார். ஆனால் அவரது நடிப்பின் மூலம் அவரது புத்திசாலித்தனத்தின் ஒரு புதையலை விட்டு செல்கிறார். அவருடைய அணுகுமுறை சமகால நடிகர்களால் இன்னும் முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறு கமல்ஹாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X