Work from Home-க்கு அனுமதி கேட்ட வந்தியத் தேவன்: ட்விட்டரை அலற விடும் பொன்னியின் செல்வன் டீம்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன்

இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்' திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட்ஜெட்டைப் போலவே மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பொன்னியின் செல்வன்.' இதனால், கோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே இந்தப் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

ப்ரோமோஷனில் பிஸியான பொன்னியின் செல்வன் டீம்

ப்ரோமோஷனில் பிஸியான பொன்னியின் செல்வன் டீம்

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் இரண்டும் கடந்த வாரம் 6ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். அதன் ஒருபகுதியாக, ட்விட்டரில் சீயான் என்ற பெயரை மாற்றியுள்ள விக்ரம், பொன்னியின் படத்தில் அவரது கேரக்டரான ஆதித்த கரிகாலன் பெயரை வைத்துள்ளார். அதேபோல், த்ரிஷாவும் ‘குந்தவை' என தனது கேரக்டர் பெயரை ட்விட்டரில் மாற்றியுள்ளார். v

தஞ்சைக்கு செல்லும் ஆதித்த கரிகாலன் விக்ரம்

தஞ்சைக்கு செல்லும் ஆதித்த கரிகாலன் விக்ரம்

இந்நிலையில், தஞ்சைக்கு செல்வதாக ட்விட் செய்திருந்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்தப் பதிவில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!" என ட்வீட் செய்திருந்தார். விக்ரமின் இந்த டிவிட்டர் பதிவு செம்ம ட்ரெண்டிங் ஆனது.

விக்ரமை செம்மையாக கலாய்த்த நடிகர் கார்த்தி

விக்ரமை செம்மையாக கலாய்த்த நடிகர் கார்த்தி

இதனையடுத்து ஆதித்த கரிகாலனான விக்ரமின் ட்விட்டுக்கு, வந்தியத்தேவனான கார்த்தி நக்கலாக பதில் கூறியுள்ளார். அதில், "இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me" என ரீ ட்வீட் செய்துள்ளார். கார்த்தியின் இந்தப் பதிவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் இப்படி உரையாடுவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X