»   »  மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்தார் கார்த்தி!

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்தார் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரீனாவில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இன்று தன்னையும் இணைத்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Actor Karthi joined with Marina protestors

சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேரெழுச்சியுடன் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு சென்று போரட்டத்தில் கலந்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியும் இன்று காலை நேரில் சென்று போரட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கார்த்தியின் தந்தை சிவகுமார் ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, பீட்டா அமைப்பையும் விளாசினார்.

கார்த்தியின் அண்ணன் சூர்யா ஒரு படி மேலே சென்று, பீட்டாவுக்கு எதிராக வழக்கே தொடர்ந்துள்ளார்.

English summary
Actor Karthi has joined with Marina Jallikkattu protestors today.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil