"என்ன பார்த்ததும் அடையாளம் கண்டுக்கிட்டாரு".. விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி!

சென்னை: விஜயகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

'விஜயகாந்த் மாதிரி யாரையும் பாக்கல..'- SA Chandrasekhar Interview | Part 1 | Filmibeat Tamil

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி விஜயகாந்த் உடன் உரையாடியது குறித்து தெரிவித்தார்.

நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார்.

 70வது பிறந்தநாள்

70வது பிறந்தநாள்

நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் மீண்டும் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், விஜயகாந்தை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார்.

 விஜயகாந்தை சந்தித்த கார்த்தி

விஜயகாந்தை சந்தித்த கார்த்தி

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் நேரடியாக சென்று சந்தித்து பேசியுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

 நடிகர் சங்கம் சார்பாக

நடிகர் சங்கம் சார்பாக

பல ஆண்டுகள் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். இந்நிலையில், நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்த் உடன் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன் என்றார்.

 அடையாளம் கண்டு கொண்டார்

அடையாளம் கண்டு கொண்டார்

என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்.

 வந்தியத்தேவன் வருகிறான்

வந்தியத்தேவன் வருகிறான்

கார்த்தியின் கொம்பன் படம் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக ரசிகர்களை மகிழ வைக்க உள்ளார் கார்த்தி. மேலும், வரும் தீபாவளிக்கு சர்தார் படத்தையும் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X