கார்த்தியின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக்..ஷாக்கான ரசிகர்கள்..விஷமிகள் சிக்குவார்களா?

சென்னை : நடிகர் கார்த்தி தனது முகநூல் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் முன்னணி நடிகராக உயர்ந்தார்

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

கார்த்தி கடைசியாக இயக்குநர் பிஎஸ் மித்ரனின் சர்தார் படத்தில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் இரண்டு மொழிகளிலும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சர்தார் படம் நல்ல வசூலை குவித்துள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் ராணுவ உளவாளியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக ராஷிகன்னா நடித்துள்ளார்.

சர்தார் 2ம் பாகம்

சர்தார் 2ம் பாகம்

ஏற்கனவே கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வந்த விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் 3வது படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் நடிகர் கார்த்தி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். சர்தார் படம் வெற்றி பெற்றதை அடுத்து சர்தார் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் 2-ம் பாகம் எடுக்குபடி ரசிகர்கள் வேண்டினர். எனவே சர்தார் 2-ம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் கணக்கு முடக்கம்

பேஸ்புக் கணக்கு முடக்கம்

இந்நிலையில்,நடிகர் கார்த்தி தனது பேஸ்புக் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்"வணக்கம் நண்பர்களே, எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் தொழில்நுட்பக் குழுவுடன் தொடர்பு கொண்டு தனது கணக்கை மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

விஷமிகளின் வேலை

விஷமிகளின் வேலை

நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி தங்களின் புகைப்படங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை குஷ்பு, நடிகர் பார்த்திபன், நடிகை காயத்ரி ஆகியோரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X