ரஷ்ய மொழியில் வெளியான கைதி டிரைலர்.. டில்லி என்னம்மா ரஷ்ய மொழி பேசுறாருன்னு பாருங்க!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ல் வெளியான கைதி திரைப்படம் ரஷ்ய மொழியில் விரைவில் வெளியாகிறது.
அதன் அட்டகாசமான டிரைலர் தற்போது ரஷ்ய மொழியில் வெளியாகி உள்ளது.
அண்ணன் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் சர்வதேச கவனத்தை பெற்று வரும் நிலையில், கார்த்தியின் படம் ரஷ்ய ரசிகர்களை கவரப் போகிறது.

டில்லியின் தரமான சம்பவம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் கார்த்தி மிரட்டி எடுத்து இருப்பார். மாஸ்டர் படத்துக்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் பண்ண தரமான சம்பவமான கைதி திரைப்படம் தற்போது ரஷ்யாவில் வெளியாக உள்ளது.

ரஷ்ய மொழியில்
'Узник' இதுதான் கைதி திரைப்படத்தின் ரஷ்ய டைட்டில். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் யூடியூபில் தற்போது வெளியாகி உள்ள கைதி படத்தின் ரஷ்ய டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஷ்ய மொழியில் கைதி படத்தை டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் எடுத்த முயற்சி கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம ஸ்க்ரிப்ட்
கைதி திரைப்படம் மொழிகளை கடந்து ஹிட் அடிக்கக் கூடிய செம ஸ்க்ரிப்ட் தான். ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை, பரபரவென கதையை நோக்கி மட்டுமே ஆக்ஷன் காட்சிகளுடன் லாரி சேசிங்கில் அசத்திக் கொண்டே செல்லும் இந்த படம் ரஷ்ய ரசிகர்களையும் நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில்
நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் இந்தோனேஷியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளி உள்ளன. இந்நிலையில், ரஷ்ய மொழியில் கைதி படம் வெளியாக போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமா பிரபலங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது கோலிவுட்டை நிச்சயம் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும்.


Click it and Unblock the Notifications











