மாரடைப்பால் உயிரிழந்த 29 வயது ரசிகர்... நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கார்த்தி
சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
ராஜூ முருகன் இயக்கி வரும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி பிஸியாக காணப்படுகிறார்.
இதனிடயே கார்த்தியின் ரசிகர் வினோத் என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த கார்த்தி சென்னை திரும்பியதும் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிஸி ஷெட்யூலில் கார்த்தி
பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்தி அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். கடந்தாண்டில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மூன்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கார்த்தியின் நடிப்பில் இந்தாண்டு ஜப்பான், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகருக்கு நேர்ந்த சோகம்
ஜப்பான் படத்தின் படப்பிடிப்புக்காக கார்த்தி கடந்த சில தினங்களாக வெளியூர் சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த வினோத் என்ற கார்த்தியின் ரசிகர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 29 வயதேயான வினோத் உயிரிழந்த செய்தி கேட்டு படப்பிடிப்பில் இருந்த கார்த்தி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த வினோத்தின் குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நேரில் சென்று அஞ்சலி
இந்நிலையில், படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த கார்த்தி, இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பியதாக தெரிகிறது. மேலும், அடுத்தடுத்து அவரது உழவன் பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்ட உழவன் விருது விழாவில் பிஸியாக இருந்தார். இதனையடுத்து இன்று திருவான்மியூரில் உள்ள வினோத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற கார்த்தி, தனது ரசிகரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்தினருக்கு ஆறுதல்
மேலும் வினோத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த செயல் அவரது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ரசிகரின் வீட்டுக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கார்த்திக்கு அவரது ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











