Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுதான் ரியல் கெத்து.. ஃபேஸ்புக் லைவ்வில் வருகிறார் கார்த்தி!
சென்னை: தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
ரிலீசுக்கு பின் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பால், இன்று மாலை ஃபேஸ்புக் லைவ்வில் ரசிகர்களிடம் கலந்துரையாடுகிறார் கார்த்தி.
'கைதி 2' கன்ஃபார்ம்.. லோகேஷ் கனகராஜ் க்ரீன் சிக்னல்!

அசுரனுக்கு அடுத்து
சமீபத்தில் வெளியான தனுஷின் அசுரன் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில், தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள கார்த்தியின் கைதி திரைப்படம் அசுரனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அசுரனை போலவே கைதியும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மகுடமாக அமைந்துள்ளது என்கின்றனர்.

தியேட்டர்கள் கூடுகிறது
விஜய்யின் பிகில் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கைதி படத்திற்கு விமர்சகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால், மேலும் தியேட்டர்கள் கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல ஏற்கனவே வெளியாகியிருக்கும் தியேட்டர்களிலும் கைதிக்கான காட்சிகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் எப்படி
தீபாவளி ரேசில் விஜய்யின் பிகிலுடன் கைதி மோதியுள்ளதால், வசூல் ஏரியாவில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளன. கணிசமான ஓபனிங் மட்டுமே கார்த்தியின் கைதிக்கு கிடைத்திருந்தாலும், வரும் நாட்களில் கைதியின் வசூல் பன்மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்பு
தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் பிகில் படத்தை போலவே கார்த்தியின் கைதி படமும் லீக் ஆகியுள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி விடுமுறை வரும் திங்கட் கிழமை வரை இருப்பதால், ரசிகர்கள் நிச்சயம் அதிக எண்ணிக்கையில் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் அதிகளவில் இருக்கிறது.
|
ரிலீசுக்குப் பின்
பொதுவாக படம் வெளியாவதற்கு முன்னர், பல விதமான புரமோஷன்களில் படக்குழு இறங்குவது வழக்கம். ஆனால், படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே, அதுகுறித்த கலந்துரையாடலுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் பங்குபெறுவார்கள். அந்த வரிசையில், நடிகர் கார்த்தி இன்று மாலை 6 மணிக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வாக தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க உள்ளார்.

இரண்டாம் பாகம்
கைதி டில்லியை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலை தெரிவித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் டில்லியை சந்திக்கலாம் எனக் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன், சுல்தான் என பல படங்களை அடுத்தடுத்து கமீட் செய்துள்ள கார்த்தி, இன்றைய லைவ்வில் கைதி 2 குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.