விஜய்யின் அந்தப் பட டைட்டிலை திருடிய அட்லீ?.. நடிகர் இப்படி ஒரு ஷாக் கொடுக்கிறாரே.. புது பஞ்சாயத்து

சென்னை: இயக்குநர் அட்லீ பாலிவுட்டிலும் தடம் பதித்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். இப்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கிவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் விஜய் படத்தின் டைட்டில திருடியதாக பிரபல நடிகர் பேசியிருக்கு விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

அட்லீ முதல் படத்தை இயக்கியபோது அவர் சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார்; அப்பட்டமாக இன்னொரு படத்தை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனங்கள்தான் எழுந்திருந்தன. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் விஜய்யை வைத்து படம் இயக்கும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று படங்களை டைரக்ட் செய்தார். இவற்றில் பிகில் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

பாலிவுட் சென்ற அட்லீ: தமிழில் நான்கு படங்கள் மட்டுமே செய்திருந்த அவருக்கு ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதில் கில்லியான அட்லீ அப்படத்தை ஹிட்டாக கொடுத்து ஷாருக்கானின் குட் புக்கில் இடம்பிடித்துவிட்டார். அதிலும் ஆயிரம் கோடி ரூபாயை படம் வசூலித்தது நினைவுகூரத்தக்கது.

Actor Karthik has said that director Atlee stole the trailer of Theri
Photo Credit:

அடுத்த பிரமாண்டம்: அதேசமயம் தென் மாநில ரசிகர்கள் அந்தப் படத்தை பார்த்து பெரிதாக திருப்திபடவில்லை. இனி இந்தப் பக்கம் அட்லீக்கு மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் காணும் என்று பலர் நினைத்திருந்த சூழலில் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நிச்சயம் இப்படம் ஜவான் போன்ற ஒரு ரிசல்ட்டை கொடுக்கும் என்றும் ஒரு தரப்பினர் கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என்ன மாதிரியான கதை?: இப்படத்தின் கதை சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகும் என்றும்; அதில் அப்பா மகன் உறவு பலமாக இருக்கும்படியாக எழுதியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முதன்முறையாக அவர் சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானருக்குள் சென்றிருக்கிறார். இதன் காரணமாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். அதனால்தான் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு எல்லா அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தெறி படத்தின் டைட்டிலை தன்னிடமிருந்து அட்லீ திருடிவிட்டார் என்று பீச்சாங்கை படத்தில் நடித்த கார்த்திக் கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "அட்லீயை பொறுத்தவரைக்கும் ஒரு திருடன். தெறி என்ற டைட்டிலை நான் வைத்திருந்தேன். என்னிடமிருந்து திருடிவிட்டார்கள். அம்பானி வீட்டு கல்யாணத்தில் தனது மனைவியின் முதுகில் பேனர் வைத்தவர் அவர். மனைவி இல்லாமல் அவரது முதுகில் பேனர் வைத்தால் யாராவது பார்ப்பார்களா" என்றார். அவரது இந்த சர்ச்சை பேச்சு பலரிடம் கண்டனத்தை கிளப்பியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X