நடிகர் கார்த்திக்கிற்கு காலில் காயம்... மருத்துவனையில் அனுமதி

சென்னை : பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்திக். பிறகு பல படங்களில் நடித்து, தனது துறுதுறுவென்ற நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்தார்.

1980 மற்றும் 1990 களில் முன்னணி நடிகராக இருந்த கார்த்திக், பிறகு குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். பிறகு தீவிர அரசியலில் இறங்கியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். உடல்நிலை காரணமாகவும் அவர் சினிமா, அரசியல் என இரண்டிலும் அதிக ஈடுபாடின்றி காணப்பட்டார்.

 மீண்டும் சினிமாவில் கார்த்திக்

மீண்டும் சினிமாவில் கார்த்திக்

பிறகு உடல்நிலை பிரச்சனைகளில் இருந்து மீண்ட கார்த்திக், தற்போது பிரசாந்த் நடிக்கும் அந்தகன், தீ அவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட கார்த்திக், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு ஓய்வில் இருந்து வந்தார்.

தவறி விழுந்த கார்த்திக்

தவறி விழுந்த கார்த்திக்

இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட கார்த்திக் தவறி விழுந்ததில் கால் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஐசியு.,வில் தொடரும் சிகிச்சை

ஐசியு.,வில் தொடரும் சிகிச்சை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சில ஆண்டுகளுக்கு முன் காலில் ஆப்ரேஷன் செய்த அதே இடத்தில் அடிபட்டுள்ளதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். அத்துடன் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதால் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பிரபலங்கள் பிரார்த்தனை

பிரபலங்கள் பிரார்த்தனை

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார்த்திக் விரைவில் குணமடைய திரை பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கார்த்திக்கின் உடல்நிலை குறித்து ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X