கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்... வித்தியாமான தலைப்பு... இன்று சூட்டிங் துவக்கம்

சென்னை : நடிகர் கருணாஸ் கடந்த 5 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தனது திரையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

அவர் நடிக்கும் புதிய படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டு சூட்டிங்கும் துவங்கியுள்ளது.

காமெடி நடிகர்

காமெடி நடிகர்

நடிகர் கருணாஸ் காமெடி நடிகராக முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகனாகவும் அம்பாசமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி போன்ற காமெடி மற்றும் குணச்சித்திர படங்களில் நடித்து வெற்றியை கொடுத்துள்ளார்.

புதிய படத்தின் சூட்டிங்

புதிய படத்தின் சூட்டிங்

கடந்த 5 ஆண்டுகளாக இவர் படம் எதுவும் நடிக்கவில்லை. அரசியலில் பிசியாக இருந்ததால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார்.இந்நிலையில் கருணாஸ் மீண்டும் படங்களில் தற்போது நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டு சூட்டிங் துவங்கியுள்ளது.

ஆதார் என தலைப்பு

ஆதார் என தலைப்பு

திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு வித்தியாசமாக ஆதார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவருடன் அருண் பாண்டியன், மணிஷா யாதவ், ரித்விகா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார்.

விரைவில் பர்ஸ்ட் லுக்

விரைவில் பர்ஸ்ட் லுக்

சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் அமைக்கவுள்ளார். அதனால் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஜான் பிரிட்டோ படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Sonu Sood's Die Hard Kid Fan's Crazy Behaviour | Kid Breaks TV | Filmibeat Tamil
மீண்டும் நடிப்பு

மீண்டும் நடிப்பு

வெண்ணிலா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. பல படங்களில் தன்னுடைய வித்தியாசமான காமெடியால் கடந்த 2001ல் இருந்து ரசிகர்களை மகிழ்வித்துவரும் கருணாஸ் கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்துள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிக்கும் இந்த படம் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X