ஒன்று கூடும் தனுஷ் சிவகார்த்திகேயன் அனிருத் ஜோடி!
சென்னை : சிவகார்த்திகேயன், சமந்தாவுடன் இணைந்து நடித்திருக்கும் 'சீமராஜா' படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிகுமார் ராஜேந்திரனோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவிருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். 24 AM ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சினிமா ஸ்ட்ரைக் முடிந்தபிறகு இப்படத்தின் வேலைகள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிகுமார் ராஜேந்திரன். இந்தப் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க தனது நண்பன் சதீஷ் பெயரை ரெக்கமண்ட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆனால், டைரக்டர் வேறொரு சாய்ஸ் வைத்திருக்கிறார். தனது முதல் படத்தில் காமெடியனாக நடித்த கருணாகரனை நடிக்கவைக்கலாம் எனக் கூறியிருக்கிறார். இதுதொடர்பான விவாவத்தில், கருணாகரனையே நடிக்க வைக்க முடிவாகியிருக்கிறதாம்.
இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் கருணாகரன். சதீஷை நடிக்கவைக்க சிவா விரும்பியும் டைரக்டர் ரவிகுமார் ஏற்றுக்கொள்ளாததால் சிவாவுக்கு சின்னதாக வருத்தமாம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.