»   »  விஜய் செயலுக்கு எதிராக காட்டமான ட்வீட் போட்ட நடிகர் கருணாகரன்!

விஜய் செயலுக்கு எதிராக காட்டமான ட்வீட் போட்ட நடிகர் கருணாகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் கருணாகரன் விஜய்க்கு எதிராக ட்வீட்- வீடியோ

சென்னை : ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நேற்று சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது.

இந்தப் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், பலர் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நடிகர் கருணாகரன், இது தொடர்பாக, " 'தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்' என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? " எனக் கேட்டு காட்டமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சிறப்பு அனுமதி

சிறப்பு அனுமதி

தமிழ் சினிமா துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் நேற்று சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது. இந்தப் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதும், பலர் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நடிகர் கருணாகரன்

இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் விஜய்யை விமர்சிக்கும் விதமாக, " 'தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்' என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழன் ஒற்றுமை

தமிழன் ஒற்றுமை

விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மெர்சல்' படத்தின் அந்தப் பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமையை கடைப்பிடிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனா இல்ல

அதற்கு முன்னதாக, ஸ்ட்ரைக்கின்போது விஜய் படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதாக வந்த தகவல்களால், நகைச்சுவையாக ஒரு ட்வீட்டையும் போட்டிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா புகைப்படத்தைப் பதிவிட்டு, 'ஸ்ட்ரைக் இருக்கு.. ஆனா இல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ரசிகர்கள் கோபம்

விஜய் ரசிகர்கள் கோபம்

கருணாகரனின் இந்த ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில விஜய் ரசிகர்கள் கேவலமான வார்த்தைகளால் கருணாகரனை திட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சினிமா துறையினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Vijay 62 shooting is going, when tamil cinema undergoes strike. In this situation, Comedy Actor Karunakaran trolls vijay on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X