நடிகர் கதிர் நடிக்கும் த்ரில்லர் படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தற்போது வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் கதிர். அதேசமயம் முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பின்பு பிகில் படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்திருந்த கதிருக்கு ஜடா, சர்பத் ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை கொடுத்தது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிக்கும் த்ரில்லர் படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள்

சாதிய ஏற்றத்தாழ்வுகள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இப்படத்தில் நடிகர் கதிர் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். சமூகத்தில் இன்றளவும் நடக்கக்கூடிய சாதியக் கொடுமைகளை வெட்டவெளிச்சமாக காட்டியிருந்த இந்த திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கதிரின் திரைவாழ்க்கையில் இன்று வரை மிகச் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் இருந்து வருகிறது . இதில் இவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல்களை பெற்றிருப்பார். சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை படிப்பின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்ற கருத்தை மிக ஆழமாக இந்த படத்தின் மூலம் கூறியிருந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது.

விஜய் சேதுபதி தம்பியாக

விஜய் சேதுபதி தம்பியாக

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தற்போது வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் கதிர் அதேசமயம் முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மதயானைக்கூட்டம் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான கதிர் அதன் பிறகு கிருமி மற்றும் என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் விக்ரம் வேதா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். புஷ்கர்,காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தமிழ் சினிமாவில் எத்தகைய தாக்கத்தை கொடுத்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் சேதுபதி மற்றும் மாதவன் கதாபாத்திரங்கள் சரிசமமாக வடிவமைக்கப்பட்டது இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. இதில் கதிருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

முழு ஹீரோ இமேஜ் வந்த பிறகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கமாக கொண்டிருந்த கதிர் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்திருப்பார். விஜய் இரட்டை வேடத்தில் கலக்கிய பிகில் திரைப்படம் வசூலிலும் செம கலக்கு கலக்கியது. இயக்குனர் அட்லியுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியாகி இருந்தது. இதில் கால்பந்தாட்ட பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக வருவார் . அட்லி அடுத்து இயக்கும் திரைப்படத்திலும் கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

த்ரில்லர் கதை

த்ரில்லர் கதை

இந்த நிலையில் கடைசியாக நடித்த ஜடா மற்றும் சர்பத் ஆகிய படங்கள் சரிவர கைகொடுக்கவில்லை இந்த நிலையில் அடுத்ததாக நடிக்கும் கதைகளை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்குகிறார். த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மிக வித்தியாசமாக வெளியாகி ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றுள்ளது. போஸ்டரில் கதிர், நரேன், நட்டி ஆகிய மூவரும் போஸ்டரில் மேல் பக்கத்தில் இருக்க கீழ் பக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி, ஆத்மியா ஆகியோர் உள்ளனர். தமிழில் இப்படத்திற்கு யூகி என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

யூகி

யூகி

யூகி போஸ்டரை பார்க்கும்போதே இது ஒரு த்ரில்லர் திரைப்படம் என கணிக்க முடிகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நட்டி மற்றும் நரேன் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் நட்டி இதற்கு முன் நடித்த கர்ணனில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து யூகி படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அதேபோல நடிகர் நரேன் கைதியில் போலீஸ் அதிகாரியாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்பொழுது யூகி படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . வினோதினி மற்றும் ஜான் விஜய் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்

வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர் கதிர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாக

நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தமிழில் கதிர் லீட் ரோலில் நடிக்க மலையாளத்தில் ஜகமே தந்திரம் ஜோஜி ஜார்ஜ் லீட் ரோலில் நடிக்க கதாநாயகிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் கயல் ஆனந்தி, குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி மற்றும் ஆத்மியா ஆகியோர் மலையாளத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜா இசையமைக்கிறார். யூகி என்ற வித்தியாசமான தலைப்புடன் வெளியாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X