»   »  'விக்ரம் வேதா'வில் செம நடிப்பு.. அடுத்த படத்தில் கதிர் போலீஸ்!

'விக்ரம் வேதா'வில் செம நடிப்பு.. அடுத்த படத்தில் கதிர் போலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'விக்ரம் வேதா' படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம், நடிகர் கதிருக்கு போலீஸ் ஹீரோவாக நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ராதா மோகன், பொம்மரிலு பாஸ்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் நவீன் நஞ்சுண்டன். இவர் இயக்கும் படம் 'சத்ரு'. இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதையைக் கொண்டது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்க இருக்கிறார் கதிர். இவரது 'சிகை' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Actor Kathir plays a cop role in his upcoming movie Sathru

"கதிரும், அவரது குடும்பத்தாரும் யாரெனத் தெரியாத நான்கு பேரால் அச்சுறுத்தப்படுகிறார்கள். அது ஏன், அந்தப் புதிரை கதிர் எப்படி 24 மணி நேரத்துக்குள் விடுவிக்கிறார் என்பதே கதை. சொல்லப்போனால், படம் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே கதிர் அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார். நான் கையாண்டிருக்கும் வித்தியாசமான திரைக்கதை ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். " எனச் சொல்லியிருக்கிறார் நவீன்.

இந்த கேரக்டருக்கு கதிரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனும் கேள்விக்கு, "ஒரு இளமையான அதேநேரம் வித்தியாசமான போலீஸ்தான் வேண்டும். இது வழக்கமான ஆக்‌ஷன் போலீஸ் கதை அல்ல. இந்த போலீஸ் குற்றத்தை வேறொரு கோணத்தில் பார்ப்பார். கதிர் நடித்த 'கிருமி', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களைப் பார்த்தபிறகுதான் இவர்தான் வேண்டும் எனத் தேர்ந்தெடுத்தேன்" என்கிறார் நவீன்.

Actor Kathir plays a cop role in his upcoming movie Sathru

'ராட்டினம்' படத்தில் நடித்த லகுபரன் இதில் அந்த நான்கு வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார். இந்த ரோல் கிட்டத்தட்ட 'தனி ஒருவன்' அர்விந்த்சாமியை நினைவுபடுத்துமாம். கதிரின் அப்பாவாக பொன்வண்ணன் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதிரின் காதலியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் முதல்கட்டப் படப்படிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 70 சதவீத காட்சிகள் இரவுநேரத்தில் எடுக்கப்பட்டவைதானாம். நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதைவிட நகர்ப்பகுதிகளில் ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது என்கிறார் நவீன்.

English summary
Actor Kathir plays a cop role in Sathru, Which is a crime thriller movie directed by Naveen Nanjundan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil