»   »  ‘காதலி காணவில்லை’... நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதிய கிஷோர்!

‘காதலி காணவில்லை’... நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதிய கிஷோர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கிஷோர் நாயகனாக நடித்து வரும் படம் ‘காதலி காணவில்லை'.

மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் தயாரிப்பில், ரவி ராஜா இயக்கி வரும் படம் ‘காதலி காணவில்லை'. ஆடுகளம், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் கிஷோர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கிஷோருக்கு ஜோடியாக ஹார்திகா நடித்திருக்கிறார். மேலும் சோப்ராஜ், பத்மா வசந்தி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்ட சண்டைக்காட்சி...

பிரம்மாண்ட சண்டைக்காட்சி...

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு கன்டெய்னர் யார்டில் பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

நூற்றுக்கணக்கான ரவுடிகள்...

நூற்றுக்கணக்கான ரவுடிகள்...

இதில், நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதும் சண்டைக் காட்சி ஒன்று பத்து நாட்கள் படமாக்கப் பட்டது. இந்த சண்டைக் காட்சியில் கிஷோருடன், சோப்ராஜ், ஹார்தி பட அதிபர் ஜி.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர்.

கன்டெய்னர் யார்டு...

கன்டெய்னர் யார்டு...

நவீன ரக மெஷின் கொண்டு இயக்கும் அந்த கன்டெய்னர் யார்டில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுக்கு மத்தியில் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டம் ஸ்கீரின்ல தெரியணும்...

பிரம்மாண்டம் ஸ்கீரின்ல தெரியணும்...

பிரம்மாண்டமாக இந்த சண்டைக் காட்சியைப் படமாக்க நிறைய செல்வாகும் என தயாரிப்பாளர் ஜி.ஆரிடம் கூறப்பட்டதாம். அதற்கு அவர், ‘செலவு பற்றி கவலை இல்லை, ஆனால் பிரம்மாண்டம் ஸ்கிரீன்ல தெரியணும்' எனப் பதிலளித்தாராம்.

English summary
The Tamil actor Kishore is doing hero role in Kadhali kanavillai, directed by Ravi Raja.
Please Wait while comments are loading...