»   »  நடிகர் கிருஷ்ணா மீது மனைவி வரதட்சணை புகார்... 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்

நடிகர் கிருஷ்ணா மீது மனைவி வரதட்சணை புகார்... 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்

Posted By: Jeyalakshmi
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சகோதரரும் நடிகருமான கிருஷ்ணா மீது அவரது மனைவி ஹேமலதா வரதட்சணை புகார் அளித்திருக்கிறார்.

மேலும் நடிகர் கிருஷ்ணாவிற்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அனைவருமே தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் ஹேமலதா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை எடுத்துக் கொண்ட கோவை போலீசார் கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

கிருஷ்ணா

கிருஷ்ணா

பிரபல தமிழ் நடிகர் கிருஷ்ணா (வயது 37). 'கழுகு', 'வன்மம்', 'வானவராயன் வல்லவராயன்', 'கற்றது களவு' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து இவர் நடித்த 'யட்சன்' படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இவருக்கும், கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கைவல்யா(29) என்ற என்ஜினீயருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

விவாகரத்து

விவாகரத்து

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கிருஷ்ணா தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி விவகாரத்து கேட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது மனைவி நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கோவை எஸ்.பி.சுதாகரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரை எஸ்.பி.சுதாகர் கோவை துடியலூரில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஹேமலதாவின் புகார்

ஹேமலதாவின் புகார்

தற்போது இந்த வழக்கை கோவை துடியலூர் மகளிர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். ஹேமலதா அளித்த புகாரில் கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நானும், நடிகர் கிருஷ்ணாவும் காதலித்து கடந்த 6.2.2014 அன்று திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் போது கிருஷ்ணாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 300 பவுன் நகை, ரூ.32 லட்சம் ரொக்கம் கேட்டனர். ஆனால் எனது பெற்றோர் 118 பவுன் நகை மற்றும் ரூ.35 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தனர்.

வரதட்சணை கேட்டு கொடுமை

வரதட்சணை கேட்டு கொடுமை

திருமணத்துக்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் டைரக்டர் காலனியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் கணவருடன் வசித்து வந்தேன். திருமணமான சில நாட்களிலேயே கிருஷ்ணாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்ட மீதி நகைகளை வாங்கி வா எனக் கூறி என்னை சித்ரவதை செய்தனர்.

நடிகையுடன் தொடர்பு

நடிகையுடன் தொடர்பு

எனது கணவர் கிருஷ்ணாவுக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு உள்ளது. இதுபற்றி நான் கேட்ட போது எனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து என்னை சித்ரவதை செய்து வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். இதனால் நான் தற்போது எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். அதன் பிறகும் எனது கணவரும், அவரது தந்தை சேகர் என்ற குணசேகரன்(66), தாய் மதுபாலா(62) ஆகியோர் சேர்ந்து என்னை மிரட்டுகிறார்கள்.எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

4 பிரிவுகளில் வழக்கு

4 பிரிவுகளில் வழக்கு

ஹேமலதா அளித்த புகாரின்பேரில் நடிகர் கிருஷ்ணா, அவரது தந்தை சேகர், தாய் மதுபாலா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ)- மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துதல், 406-நகையை வாங்கி ஏமாற்றுதல், 506(1)-கொலை மிரட்டல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது துடியலூர் இன்ஸ்பெக்டர் அமுதா இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Tamil film actor Kreshna was booked under the dowry harassment charge by the Coimbatore district police on Wednesday in response to a complaint by his wife.Acting on her complaint, police on Wednesday registered a case against Kreshna, his father K Gunasekaran (66) and his mother G Madhubala (62) for subjecting a woman to cruelty, criminal breach of trust and criminal intimidation.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more