»   »  மும்பையில் செட்டில் ஆகும் ஓவர் ஆக்டிங் குயிலி... சீரியலுக்கு குட்பை சொல்கிறார்

மும்பையில் செட்டில் ஆகும் ஓவர் ஆக்டிங் குயிலி... சீரியலுக்கு குட்பை சொல்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல்களில் அலட்டல் ப்ளஸ் ஓவர் ஆக்டிங் மாமியாராக நடித்து வரும் நடிகை குயிலி சீரியலுக்கு குட்பை சொல்லப் போகிறாராம். குழந்தைகளின் படிப்புகளுக்காக மும்பையில் செட்டில் ஆகப்போவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம் குயிலி.

சுமார் 30 ஆண்டுகால நடிகை குயிலி, பூவிலங்கு படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் 'நிலா அது வானத்து மேலே...'என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார்.

சினிமாவில் கேரக்டர் பாத்திரங்கள் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் பிரபல அம்மா நடிகையாகி விட்டார். தற்போது சரவணன் மீனாட்சி, காதல் முதல் கல்யாணம் வரை போன்ற தொடர்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் இயல்பான அம்மாவாக நடித்து வரும் குயிலிக்கு இல்லத்தரசிகளிடம் தனி வரவேற்பு உள்ளது. குடும்பத்தில் இருக்கும் அம்மாக்கள் எந்தமாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்துவார்கள் என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு நடித்து வருகிறேன் அதனால்தான் என்னுடைய நடிப்பு குடும்பப் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது என்று கூறியுள்ளார் குயிலி

அலட்டல் அம்மா

அலட்டல் அம்மா

சின்னத்திரை மூலம் தினம்தினம் நேயர்களை சந்தித்தபோதும், சினிமாவில் அம்மா கதாபாத்திரங்கள் வந்தால் விடுவதில்லை தற்போது விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் டூ சென்னை என்ற படத்தில் அவரது அம்மாவாக நடித்து வருகிறார்.

மும்பையில் செட்டில்

மும்பையில் செட்டில்

குயிலின் குழந்தைகள் மும்பையில் படித்து வருகிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. குழந்தைகள் படிப்பிற்காக மும்பையில் செட்டிலாக போகிறார் என்கிற தகவல் பரவி வருகிறது.

தணிக்கை குழு உறுப்பினர்

தணிக்கை குழு உறுப்பினர்

அலட்டல் மாமியராக சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல்வரை சீரியல்களில் நடித்து வந்த குயிலி அதிமுகவில் இணைந்து அதிரடியாக பிரச்சாரம் செய்து வந்தார். தணிக்கை குழு உறுப்பினராகவும் பிசியாக உள்ளார் குயிலி. அரசியலிலும் பிசியாக உள்ளார். சர்வதேச பட விழாக்களிலும் தீவிரமாக இருக்கிறார்.

சீரியலுக்கு குட்பை

சீரியலுக்கு குட்பை

அரசியல், குடும்பம் என வேலை பளு அதிகமாகி விட்டதால் சின்னத்திரை சீரியல்களிலிருந்து விலக முடிவு செய்து விட்டார் குயிலி. அதே நேரத்தில் சினிமாவில் நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். அப்போ அலட்டல் மாமியாரை பார்க்க முடியாதா என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள். அப்பாடா தப்பித்தோம் என்கின்றனர் குயிலி செய்யும் ஓவர் ஆக்டிங் பிடிக்காதவர்கள்.

English summary
Cinema and Serial actress Kuyili good bye for TV serial sources said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil