»   »  மாதவனுடன் பைக் ரைட் போன டிடி... எல்லாம் ஒரு விளம்பரம்!!

மாதவனுடன் பைக் ரைட் போன டிடி... எல்லாம் ஒரு விளம்பரம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடிகர் மாதவனுடன் பைக்கில் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எல்லாம் டிவி நிகழ்ச்சியை புரமோட் செய்யத்தானாம். குடியரசு தினவிழாவை முன்னிட்டு விஜய் டிவியின் காபி வித் டிடி சிறப்பு நிகழ்ச்சியின் விருந்தினராக பங்கேற்றுள்ள மாதவன், தொகுப்பாளினி டிடியை மோட்டார் பைக்கில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.

இறுதிச்சுற்று படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கும் மாதவன் அந்த படத்தை புரமோட் செய்வதிலும் பிசியாகவே இருக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் பேட்டி, கொடுப்பதோடு தொகுப்பாளின் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்து கூடவே பரபரப்பையும் ஏற்படுத்தினார். இப்போது பைக் ரைடு வந்திருக்கிறார்.

Actor Madhavan on KWDD for Republic Day special

அலைபாயுதே தொடங்கி வேட்டை வரை பல படங்களில் நடித்திருந்தாலும் ரன் படம் தவிர அதிகம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் தரவில்லை நடிகர் மாதவன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம் இறுதிச்சுற்று. மாதவன், ரித்திகா சிங், ராதாரவி, நாசர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் இறுதிச்சுற்று படம் தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் உருவாகியிருக்கிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். தமிழில் சி.வி.குமாரும், இந்தியில் ராஜ் குமார் ஹிரானியுடன் இணைந்து மாதவனும் இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.

ஜனவரி 29ம் ரிலீஸ் ஆக உள்ளது இறுதிச்சுற்று. 7வருடங்கள் கழித்து மாதவன் சிங்கிள் ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆயுத எழுத்து ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்தனர். இதுவே புரமோசன் டிரிக் என்று பேசப்பட்டது. இப்போது டிவிகளில் புரமோசன் செய்யும் விதமாக பேட்டி கொடுத்து கூடவே பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.

சிம்ப்ளி குஷ்புவில் முத்த சர்ச்சை போல காபி வித் டிடியில் இன்னும் என்ன சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறாரோ மாதவன்.

English summary
Actor Madhavan is busy promoting his upcoming film Irudhi Suttru, which is all set to hit screens on January 29. The actor will now be a part of the chat show Koffee with DD on Vijay television. Maddy, we hear, also took the show's host DD on a bike ride.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil