»   »  ஆந்திர "முதல்வராகிறார்" மகேஷ் பாபு!

ஆந்திர "முதல்வராகிறார்" மகேஷ் பாபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஸ்பைடர் படத்தை அடுத்து டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு தனது அடுத்த படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Actor Mahesh Babu is going to act in CM role

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரை 15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதுவே இப்படத்தின் சாதனையாகும். இந்த படத்தின் மூலம் நடிகர் மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்கிறார். பாரத் அனே நேனு என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் மகேஷ் பாபு, முதல்வராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் முதல்வன்' படத்தின் இந்தி ரீமேக்கான நாயக்' படத்தில் அணில் கபூர் முதல்வராக நடித்தார். கடந்த 2010-இல் வெளியான லீடர்' படத்தில் ராணா முதல்வராக நடித்திருந்த நிலையில், மகேஷ் பாபு முதல்வர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுதவிர அந்த படத்தில் சரத்குமாரும் நடிக்க இருக்கிறாராம். மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tollywood actor Mahesh Babu is acting in direct tamil movie spider. After this he is going to take chief minister role.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil