twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ளிவிழா நாயகன் மைக் மோகனுக்கு இன்று பிறந்தநாள்!

    |

    சென்னை : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே...என்ற பாடலை கேட்டதும், நடிகர் மோகனின் தனி ஸ்டைல் தான் நம் நினைவுக்கு வரும்.

    Recommended Video

    Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

    மோகன் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெள்ளி விழாதான் என்ற நம்பிக்கை நிலவியதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பட்டப்பெயரும் உண்டு.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் மைக் மோகனுக்கு ரசிகர்கள்,நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    எவ்ளோ ஹேப்பியா இருக்காரு பாருங்க.. மரணத்திற்கு சில நிமிடங்கள் முன் பிக் பாஸ் பிரபலம் போட்ட பதிவு! எவ்ளோ ஹேப்பியா இருக்காரு பாருங்க.. மரணத்திற்கு சில நிமிடங்கள் முன் பிக் பாஸ் பிரபலம் போட்ட பதிவு!

    நடிகர் மோகன்

    நடிகர் மோகன்

    தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் மோகன். 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1956-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். ஹோட்டல் முதலாளியின் மகனான இவர் ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

    எதார்த்த நாயகன்

    எதார்த்த நாயகன்

    எம்ஜிஆர், சிவாஜி வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்த போதே ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் முத்துராமன், ஜெய்சங்கர் ஏராளமானோர் ஹீரோக்களாக அறிமுகி வெற்றிப்படங்களை கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து கமல், ரஜினி காலகட்டத்தில் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி என ஹீரோக்கள் வந்தார்கள். இந்தக் கட்டத்தில் எதார்த்தமாக சினிமாவில் வந்தவர் தான் மோகன்.

    கோகிலா மோகன்

    கோகிலா மோகன்

    கமல் லீட் ரோலில் நடித்த கோகிலா என்ற கன்னடத்திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியானார் மோகன். கோகிலா பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமும் இதுவே. இந்தப் படம்தான் மோகனுக்கும் முதல் படமாக அமைந்ததால் கோகிலா மோகன் என்று அழைக்கப்பட்டார். இதையடுத்து யதார்த்தமான நடிப்பையும் படங்களையும் தந்து, மக்களின் மனங்களில் புகுந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

    மைக் மோகன்

    மைக் மோகன்

    பாடகர் கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் இன்று வரை எத்தனையோ பேர், எத்தனையோ விதமான பாடகர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால், மோகனுக்கு மைக்கும் பாட்டும் பொருந்திப்போனது. இவர் நடித்த பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்து இருந்தார். இளையராஜா, மோகன் கூட்டணியில் பாடம் என்றால், அது நிச்சயம் வெள்ளி விழா கண்டுவிடும் என்பதால், மோகனுக்கு வெள்ளிவிழா நாயகன் என்ற செல்ல பெயரும் உண்டு.

    பல வெற்றிப்படங்கள்

    பல வெற்றிப்படங்கள்

    கோபுரங்கள் சாய்வதில்லை, பிள்ளைநிலா, நெஞ்சமெல்லாம் நீயே, உதயகீதம், நூறாவது நாள், கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை,விதி, ஓசை, குங்குமச்சிமிழ், இதய கோவில், மெல்லத் திறந்தது கதவு, ஆயிரம் பூக்கள் மலரட்டும், ரெட்டை வால் குருவி, உருவம் என மோகன் நடித்த அனைத்து படங்களும் அதிரிபுதிரி ஹிட்டாகின. மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் தேசிய விருதை பெற்று மோகனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

    இன்று பிறந்தநாள்

    இன்று பிறந்தநாள்

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஆட்சி நடத்தி வந்த மோகன், பல இனிமையான பாடல்கள் மூலம் பலரின் இரவுகளை இனிமையாக்கி வருகிறார். தொலைக்காட்சி, ரேடியோக்களில் மோகன் ஹிட்ஸ் என லிஸ்டேவைத்து இருக்கிறார்கள். இன்று பிறந்த நாள் கொண்டாடும் மைக் மோகனுக்கு பிலிமிபீட் சார்பாக இனி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    English summary
    Mouna Raagam Hero Mic Mohan Birthday special story : மைக் மோகனுக்கு இன்று பிறந்த நாள்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X