அண்ணன் கேரக்டரா நோ...இந்த கேரக்டர்னா தான் ஓகே...மோகன் சொன்ன அதிர வைத்த தகவல்
சென்னை : தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக தான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்த நடிகர் மோகன், மற்றொரு புது தகவலையும் மீடியாக்கள் மூலம் பரவ விட்டுள்ளார். இதை கேட்ட அனைவரும் அதிர்ந்து போய் உள்ளனர்.
1980, 90 களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் மோகன். இவர் படங்களில் எல்லாம் மைக் பிடித்து பாடுவதை போல் நிச்சயம் ஒரு பாடல் இருக்கும். அப்படி அவர் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உள்ளன. இதனால் தான் இவரை அனைவரும் மைக் மோகன் என்று அழைத்தனர். இவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கண்டவையாகும்.

மோகனின் ரீஎன்ட்ரி
ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த், பிரபு என பல ஹீரோக்கள் பீக்கில் இருந்த போதே அவர்களுக்கு இணையாக ஹிட் படங்களைக் கொடுத்து, அனைவருக்கும் டஃப் கொடுத்தவர் மோகன். அப்படி புகழின் உச்சியில் இருந்தவர், தவறான நோயால் பாதிக்கப்பட்டதாக பரவிய ஒரு வதந்தியால் ஃபீல்ட்அவுட் ஆகும் நிலை ஏற்பட்டது. கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகி இருக்கும் மோகன், விஜய்ஸ்ரீ இயக்கும் ஹரா படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு அண்ணனா
இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய்யின் இரண்டு அண்ணன்களில் ஒருவராக மோகன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்கும் இந்த படத்தில் மூத்த அண்ணன் ரோலில் மோகன் நடிப்பதாக கூறப்பட்ட தகவலை ரசிகர்கள் கொண்டாடினர்.

மோகன் எடுத்த ஷாக் முடிவு
ஆனால் விஜய்க்கு அண்ணன் ரோலில் தான் நடிப்பதாக வெளியான தகவலை மோகன் மறுத்துள்ளார். விஜய் படத்தில் தான் நடிக்கவில்லை என்று மோகன் சொன்னதை விட, அவர் சொன்ன மற்றொரு விஷயம் தான் அனைவரையும் ஷாக் ஆக வைத்துள்ளது. மோகன் கூறுகையில், ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படம் பற்றி யோசிப்பேன். அது மட்டுமில்லை. தொடர்ந்து ஹீரோ ரோலில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என கூறினார்.

இதெல்லாம் நடக்குற காரியமா
1980, 90 களில் ஹீரோவாக நடித்தவர் மோகன். தற்போது இவருக்கு வயது 65. இந்த வயதிலும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். மற்ற ரோல்களில் நடிக்க மாட்டேன் என மோகன் அடம்பிடிப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இருந்தாலும் திரையுலகில் இவருக்கென தனி மவுசு இருப்பதால், இன்றைய இளம் ஹீரோக்கள் பலருக்கும் இவர் டஃப் கொடுப்பாரோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











