»   »  பிப்ரவரி 28ல் நகுல் திருமணம்..நீண்டநாள் காதலியை மணக்கிறார்

பிப்ரவரி 28ல் நகுல் திருமணம்..நீண்டநாள் காதலியை மணக்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தேவயானியின் சகோதரரும், நடிகருமான நகுலுக்கு வருகின்ற பிப்ரவரி 28ல் திருமணம் நடக்கவிருக்கிறது.

தமிழில் வளர்ந்து வரும் நாயகர்களில் குறிப்பிடத்தகுந்தவர் நகுல். இவர் பாய்ஸ், காதலில் விழுந்தேன்,வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

Actor Nakul Enters Wedlock February 28

தற்போது நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி திருமணம் செய்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

இவர்கள் இருவரின் திருமணமும் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.மேலும் அதே நாளில் இருவரின் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.

நகுல் தற்போது அமளி துமளி, நாரதன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தனது சகோதரி தேவயானி பணியில் தற்போது நகுலும் தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Actor Nakul his Longtime Girlfriend Shruti Baskar to Marry on February 28.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil