‘வாட்டர் பர்த்’ முறையில் தண்ணீர் தொட்டியில் பிரசவம்…. நகுலின் மனைவி வெளியிட்ட வீடியோ !

சென்னை : நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி வாட்டர் பர்த் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மரியாதைக்குரிய மகப்பேரின் அனுபவத்தை நான் உணர்ந்த நாள் என்று ஸ்ருதி அதில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது.

பாய்ஸ் அறிமுகம்

பாய்ஸ் அறிமுகம்

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனவர் நகுல். அந்த படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக அவர் நடித்து இருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஹீரோவாக அறிமுகம்

ஹீரோவாக அறிமுகம்

பாய்ஸ் படத்திற்கு பிறகு, ஹீரோவாக காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்கா நாக்கு முக்கா பாடல் அனைவரையும் ஆட்டம் போடவைத்து நகுலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மாசிலாமணி, நான் ராஜாவாகப்போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில்

விஜய் தொலைக்காட்சியில்

வரிசையாக பல படங்களில் நடித்து வந்த நகுல், ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனதால், கலர்ஸ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கினார். மேலும், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். பின்னணி பாடகரான இவர் பல திரைப்படங்களில் பாடலையும் பாடியுள்ளார்.

நிச்சயம் மன்னிப்பு கேட்கனும்

நிச்சயம் மன்னிப்பு கேட்கனும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேறியது குறித்து நகுல் கூறியிருந்தார். அதில்,காளிவேடத்தில் இருந்து வனிதா தங்களை தரக்குறைவாகப் பேசியதாக குற்றம் சாட்டினார். என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை அவங்களை வனிதா அப்படி பேசியிருக்கக்கூடாது. ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வாயமூடிட்டு இருங்க

வாயமூடிட்டு இருங்க

அதற்கு பதிலளித்த வனிதா, நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் பேச்சுக்களை கேட்க எனக்கு நேரம் இல்லை. எனக்கு ஒருவருடன் பிரச்சினை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சினை இருந்தது என்று அர்த்தம். நாங்களே வாயை மூடிக்கொண்டு இருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல்இருக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

பெற்றோராகி ஓராண்டு

பெற்றோராகி ஓராண்டு

நடிகர் நகுல் தனது குழந்தை அகிராவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தாய்பால் வாரத்தை முன்னிட்டு கணவர் நகுல் உடனிருக்க மகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தை போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில் அகிராவிற்கு ஒரு வயது ஆகிவிட்டது. நானும் நகுலும் பெற்றோராகி ஓராண்டாகி விட்டது. நான் அகிரா அவளுக்கு தாய்பாலூட்ட ஆரம்பித்து ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இது ஒரு அழகான ரோலர் கோஸ்டர் அனுபவம். இந்த ஒரு வருடத்தில் தாய்பால் ஊட்டுவது தொடர்பாக நான்நிறைய கற்றுக் கொண்டேன் என்று பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

தண்ணீர் தொட்டியில் பிரசவம்

இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு கடந்த ஆண்டு டப்பாத்தில் அதாவது வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் குழந்தை பெற்றுள்ளார். இதில் ஸ்ருதிக்கு இயற்கை முறையில் வீட்டில் சுக பிரசவம் நடைபெற்றது. தற்போது அந்த வீடியோவை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Workout From Home | Nakul |Kajal Agarwal | Katrina Kaif
மறக்க முடியாத நாள்

மறக்க முடியாத நாள்

ஆகஸ்ட் 2, 2020ம் ஆண்டு எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் என்றைக்கும் மறக்க முடியாத நாள். எனக்குத் தெரிந்த பல பெண்களின் அதிர்ச்சிகரமான பிறப்பு அனுபவத்தையும் எனக்கு தெரியாத பல பெண்களின் கடினமாக அனுபவத்தையும், மரியாதைக்குரிய மகப்பேறு அனுபவத்தையும் நான் உணர்ந்தேன். மருத்துவர் விஜயாவுக்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று ஸ்ருதி கூறியுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திஉள்ளதுடன் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X