தங்கையை இயக்குனராக அறிமுகப்படுத்தும் பிரபல தெலுங்கு நடிகர்!
ஹைதராபாத் : இந்திய சினிமாவில் சமீப காலமாக பெண் இயக்குனர்களின் வருகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
ஹலிதா சமீம்,சுதா கொங்கரா உள்ளிட்ட பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி தனது தங்கையை இயக்குனராக தனது சொந்த தயாரிப்பின் கீழ் அறிமுகப்படுத்துகிறார்.

டக் ஜெகதீஷ்
நடிகர் நானி தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் இவரது திரைப்படங்களை விரும்பி பார்க்க தமிழில் வெப்பம்,நான் ஈ, ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். டக் ஜெகதீஷ், ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தீப்தி கன்டா
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வால் போஸ்டர் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் நானி தனது தங்கையை இயக்குனராக அறிமுகம் செய்கிறார். ஏற்கனவே அவ், ஹிட், ஹிட் 2 போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்திருக்கும் நானியின் வால் போஸ்டர் சினிமாஸ் அடுத்து நான்காவது திரைப்படத்தை நானியின் தங்கை தீப்தி கன்டா இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஹீரோயின் சப்ஜெக்ட்
தீப்தி கன்டா ஏற்கனவே "அனகனகா ஒக்க நன்னா " என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் "மீட் க்யூட்" என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பின்னால் அவரது தங்கை
இந்த சந்தோஷமான செய்தியை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நானி பகிர்ந்துள்ளார். அதில் "மீட் க்யூட்" என எழுதப்பட்ட க்லாப் போர்டை கையில் வைத்துக் கொண்டு நிற்க பின்னால் அவரது தங்கை உட்கார்ந்து கதையை எழுதிக் கொண்டு உள்ளார் . அருகில் சத்யராஜ் வாக்கிங் ஸ்டிக் உடன் அமர்ந்துள்ளார். தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் விஜய் புல்கனின் இசை அமைக்கிறார். விரைவில் இதில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











