மாம்பழம் வாங்கலையோ மாம்பழம்.. லாக்டவுனில் பழம் விற்று சம்பாதித்த பிரபல நடிகர்!

சென்னை: லாக்டவுனில் பிரபல நடிகர் மாம்பழம் விற்ற போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.

கடந்த ஆண்டு முதலே கொரோனா தாக்கம் புரட்டி போட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சினிமா உட்பட தொழிற்துறைகள் அனைத்தும் முடங்கியிருந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு தெரிந்த தொழிலை மேற்கொண்டு வந்தனர்.

காய்கறி விற்பனை

காய்கறி விற்பனை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி பிரபலங்களும் காய்கறிகள் விற்பனை செய்வது, பழங்கள் விற்பனை செய்வது, சமையல் தொழிலை மேற்கொள்வது என இருந்து வந்தனர்.

மாம்பழம் விற்பனை

மாம்பழம் விற்பனை

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போதும் சில நடிகர்கள் நடிப்பை மட்டுமே நம்பியில்லாமல் தங்களுக்கு தெரிந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் லாக்டவுன் நேரத்தில் மாம்பழம் விற்பனை செய்துள்ளார்.

தமிழிலும் சில படங்கள்

தமிழிலும் சில படங்கள்

தெலுங்கு சினிமா உலகின் பிரபல நடிகரான கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விவசாயம்

நடிகர் விவசாயம்

தெலுங்கில் பெரும்பாலான நடிகர்கள் வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார்.

கடந்த வருட லாக்டவுனின் போதே விவசாயம் செய்வதில் இறங்கினார் நரேஷ்.

தோட்டத்தில் விளைந்த

தோட்டத்தில் விளைந்த

இந்நிலையில் இந்த லாக்டவுனில் மாம்பழம் மற்றும் நாவல் பழங்களை அறுவடை செய்துள்ள நரேஷ் அவற்றை கடை விரித்து விற்பனை செய்துள்ளார். நரேஷ் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்கள் மற்றும் நாவல் பழங்களை பலரும் வாங்கிச் செல்கின்றனர்.

நரேஷ் என்கிற விவசாயி

நரேஷ் என்கிற விவசாயி

இது குறித்து நடிகர் நரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, கிலோ 50 ரூபாய்க்கு விற்றார்.

உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி

அதன் மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்," எனக் குறிப்பிட்டுள்ளார். நரேஷின் இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: லாக்டவுன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X