»   »  'என்னைக் காமெடியன் ஆக்கிட்டாங்க...' - நாசர் பாவம்!

'என்னைக் காமெடியன் ஆக்கிட்டாங்க...' - நாசர் பாவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அப்பாடி 'தலைவர்' படம் தப்பிச்சது..நாசர் பாவம்!-வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி பின்னர் தான் இயக்கிய 'அவதாரம்' உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்தவர் நாசர்.

பல தமிழ்ப் படங்களில் அதிரடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். பிறகு, அவரை குணச்சித்திர நடிகராக்கிவிட்ட இயக்குனர்கள் அப்பா, மாமா போன்ற பாத்திரங்களில் நடிக்கவைத்தார்கள்.

ஆனால் சமீபகாலமாக இயக்குநர்கள் தங்களது படங்களில் நாசரை காமெடியனாக நடிக்க வைக்கிறார்கள். இதுபற்றி நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் நாசர் கூறியுள்ளார்.

மறுப்பதில்லை :

மறுப்பதில்லை :

'இதுவரை நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். எந்தமாதிரியான வேடங்களில் நடிக்க அழைத்தாலும் நான் மறுப்பதில்லை. ஒரு நடிகன் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பது தான் அழகு என்பதால் நம்பிக்கொடுக்கிற வேடங்களை மறுக்காமல் நடித்து வருகிறேன்.

காமெடியன் ஆக்கிட்டாங்க :

காமெடியன் ஆக்கிட்டாங்க :

தற்போது சில படங்களில் என்னை காமெடியனாக்கி வருகிறார்கள். நானும் காமெடி வேடங்களில் நடித்து விடுவேன் என்றாலும் அதை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் பயம் ஏற்படும்.

எனக்கே பயமா இருக்கு :

எனக்கே பயமா இருக்கு :

அப்படி மனதளவில் பயம் ஏற்படும்போது டைரக்டர்களிடம் சொல்வேன். அப்போது அவர்கள், நல்லாதான் பண்றீங்க, சிரிக்கிற மாதிரிதான் இருக்கு என்பார்கள். அப்படி அவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

இன்னும் சில படங்களில் :

இன்னும் சில படங்களில் :

தற்போது நான் மேலும் சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் என்னை அங்கீகரித்து விட்டால் சந்தோஷப்படுவேன்' என்கிறார் நாசர்.

English summary
Nassar played the character role in many and played lead role in a few films. Recently, directors cast Nassar as a comedian in their films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X