Don't Miss!
- Automobiles
0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!
- News
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!
- Finance
உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்படலாம்.. சவுதி அராம்கோ CEO எச்சரிக்கை.. ஏன் தெரியுமா?
- Lifestyle
இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
- Sports
சிஎஸ்கேக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
- Technology
இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சைக்கோ த்ரில்லர் படத்தில் நடிக்கும் நட்டி... படத்துல நட்டிக்கு 4 நாயகிகளாம்!
சென்னை : நடிகர் நட்டி நட்ராஜ் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக வெப் என்ற படம் உருவாகி வருகிறது.
இந்தப் படம் சைக்கோ த்ரில்லராக உருவாகி வருகிறது. ஹாரூன் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் விஜய் அம்மா பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு.. உண்மையா? ஃபேக்கா? குழப்பத்தில் ரசிகர்கள்!

நடிகர் நட்ராஜ்
நடிகர் நட்ராஜ் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் எங்க வீட்டு பிள்ளை படம் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாகியிருந்தார் நட்ராஜ். தொடர்ந்து இவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சைக்கோ த்ரில்லர் படம்
இந்நிலையில் வேலன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் விஎம் முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள சைக்கோ த்ரில்லர் படத்தில் இவர் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் ஷில்பா மஞ்சுநாத்.

4 கதாநாயகிகள்
அவருடன் சேர்ந்து படத்தில் நட்டிக்கு 4 கதாநாயகிகள். ஷாஸ்வி பாலா, சுபப்பிரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோரும் படத்தில் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இவர்களுடன் காளியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிலந்தி வலை கான்செப்ட்
மேலும் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு, பிரீத்தி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிலந்தி வலையில் மாட்டிக் கொண்டு வெளியேறத் துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆடுபுலி ஆட்டம்
அதையொட்டியே படத்திற்கு வெப் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தில் நட்டி மற்றும் ஷில்பா மஞ்சுநாத்திற்கு இடையிலான ஆடுபுலி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உருவெடுத்துள்ள பார், பப் கலாச்சாரததை மையமாக கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹாரூன் தெரிவித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ் அறிவிப்பு
கோவா போன்ற இடங்களில் சூட்டிங் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படத்தின் சூட்டிங் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ஹாரூன் குறிப்பிட்டுள்ளார்.