»   »  மனமெட்ராஸ் கொசம்...சென்னை மக்களுக்காக முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டும் நவ்தீப்

மனமெட்ராஸ் கொசம்...சென்னை மக்களுக்காக முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டும் நவ்தீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் நவ்தீப் சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டவிருக்கிறார்.

அறிந்தும் அறியாமலும் உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் படங்களில் நடித்தவர் நவ்தீப்.

Actor Navdeep teams up with Young Telugu actors

இவர் தற்போது தெலுங்கின் இளம் நடிகர்கள் ராணா, பிரபாஸ், சுதீர் பாபு, அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னை மக்களுக்காக நிதி திரட்டவிருக்கிறார்.

உணவுப் பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ நிறைய தெலுங்கு நடிகர்கள் முன்வந்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் நவ்தீப் தனது நண்பர்கள் மற்றும் மற்றவர்களுடன் இணைந்து சென்னை மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை திரட்டி ஒரு டிரக்கில் அனுப்பி வைத்திருக்கிறார்.

மனமெட்ராஸ் கொசம்

மேலும் தெலுங்கின் இளம் நடிகர்கள் ராணா, பிரபாஸ், சுதீர் பாபு, அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னை மக்களுக்காக நிதி திரட்டவிருக்கிறார்.இதற்கு இவர்கள் தெலுங்கு மொழியில் 'மனமெட்ராஸ் கொசம்' என்று பெயரிட்டு இருக்கின்றனர்.

மால்களில்

இந்த நிதி திரட்டும் படலம் மன்ஜீரா மற்றும் கூகட் பள்ளி போரம் மால்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சக நடிகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நவ்தீப் மற்ற நடிகர்கள் அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

வரும் ஞாயிறு

வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 -7 மணிகள் வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி தெலுங்கு நடிகர்கள் 10 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்கள் சென்னை நிதிக்காக ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதி திரட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Navdeep teams up with Young Telugu actors Rana, Prabhas, Allari Naresh and Laksmi Manchu For Chennai Flood Relief Fund Collection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil