twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “தி காஷ்மீர் ஃபைல்ஸ்“ ஒரு உண்மை கதை… நச்சுனு பதிலளித்த பிரபலம் !

    |

    மும்பை : "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" ஒரு உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம், இதில் சொந்த கருத்தை சேர்த்தால் அது உண்மை சம்பவத்தைக்கொண்ட படமாக இருக்காது என்று பிரபல நடிகர் கருத்துக்கூறியுள்ளார்.

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் அனைத்து முரண்பாடுகளையும் மீறி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

    RRR box office collection: 3 நாட்களில் இத்தனை கோடியா? உலக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராஜமெளலி!RRR box office collection: 3 நாட்களில் இத்தனை கோடியா? உலக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராஜமெளலி!

    குறைந்த பட்ஜெட்டில் குறைந்த ப்ரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தபோதிலும், காஷ்மீர், மும்பை, டெல்லி, மற்றும் கிழக்கு பஞ்சாப் ஆகிய இடங்களிலிருந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது.

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனுபம் கெர் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ள இப்படம் 1990 ஆம் ஆண்டு காஷ்மீர் கிளர்ச்சியின் போது நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரின் கண்ணீர் கதை

    காஷ்மீரின் கண்ணீர் கதை

    80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதே இப்படத்தின் கதையாகும். இப்படத்தின் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் கரைபுரண்டு ஓடுகிறது. அழகு கொஞ்சும் காஷ்மீரின் கண்ணீர் கதையை மனதை உலுக்கும் வகையில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி உள்ளார்.

    நிச்சயம் பார்ப்பேன்

    நிச்சயம் பார்ப்பேன்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நவாசுதீன் சித்திக், நான் இன்னும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்கவில்லை, ஆனால் கண்டிப்பாக பார்ப்பேன் என்றார். மக்கள் இந்த படத்தை விரும்பி பார்க்கிறார்கள், எனவே நானும் இந்த படத்தை கட்டாயம் பார்ப்பேன் என்றார். ஆனால், பாலிவுட்டில் ஒரு சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

    உண்மை சம்பவமாக இருக்காது

    உண்மை சம்பவமாக இருக்காது

    ஒவ்வொரு இயக்குனருக்கும் படம் எடுப்பதில் ஒரு பாணியும், படம் குறித்த புரிதலும் இருக்கும். அவர் தனது கருத்தை வைத்து படத்தை எடுப்பார்கள். எந்தவொரு தயாரிப்பாளரும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களில் கூட தங்கள் சொந்த கண்ணோட்டத்தை சேர்க்க வேண்டும் என நினைத்தால் அது உண்மை சம்பவத்தைக்கொண்ட கதையாக இருக்காது என்று நவாசுதீன் சித்திக் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    Actor Nawazuddin Siddiqui talks about The Kashmir Files, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து நவாசுதீன் சித்திக் பேட்டி
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X