கலெக்ஷனில் கல்லா கட்டும் ‘லோகா‘..பட வெற்றி விழாவில் நஸ்லென் உருக்கமான பேச்சு!
சென்னை: இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் மற்றும் சாண்டி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த 'லோகா: சாப்டர் 1 - சந்திரா' திரைப்படம், வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் டோமினிக் அருண், இந்தப் பயணம் மிக நீண்ட, இனிமையான பயணம். உங்களுடன் எங்கள் படத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த பெருமையாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி என்றார்..
'லோகா: சாப்டர் 1 - சந்திரா': இதைத் தொடர்ந்து பேசிய படத்தின் நாயன் நஸ்லென், எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை, அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கிறது, நான் நினைத்து பார்க்காததெல்லாம் நடக்கிறது. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேடம் ஃபோன் செய்து பாராட்டினார்கள். அவர்களை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள். எங்கள் படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

எதிர்பார்க்காத வெற்றி: படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால் தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பாவிடம் ஆக்சன் பண்ணபோகிறேன், என்றவுடன் நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக் கொள் என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது அதற்கு, நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்பு தான் காரணம். நான் மட்டும் கிரடிட் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்களை தந்த அனைவருக்கும் நன்றி என்றார்.
லோகா 5பாகமாக எடுக்க திட்டம்: 'லோகா: சாப்டர் 1 - சந்திரா' படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான துல்கர் சல்மான் பேசுகையில், நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானது தான். கல்யாணியைத்தவிர இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார்.
கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











