twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் பாதிப்பு.. கால் துண்டிக்கப்பட்ட பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகம் இரங்கல்!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அங்கும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் விதிவிலக்கல்ல.

    அடப்பாவமே.. அந்த சீரியல் ஹீரோயினை அடுத்து இப்போது ஹீரோவுக்கும் கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்! அடப்பாவமே.. அந்த சீரியல் ஹீரோயினை அடுத்து இப்போது ஹீரோவுக்கும் கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்!

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    மூத்த நடிகர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகப் போராடி வருகின்றன. இந்நிலையில் மற்றொரு ஹாலிவுட் நடிகர் நிக் கார்டேரோ (Nick Cordero) கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர், அபார்ட்மென்ட்ஸ் அட் 254, டான் ஜுவான், இசைட் கேம், மோப் டவுன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    த ஸ்டாண்ட் அப் கய், கோயிங் இன் ஸ்டைல் ஆகிய காமெடி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். புளூபிளட்ஸ், த டாக், த பிராட்வே.காம் ஷோ உட்பட பல டிவி தொடர்களில் நடித்துள்ள இவர் கலிபோர்னியாவில் வசித்துவந்தார். இவருக்கு கடந்த மார்ச் 30 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று தாக்கியதை அடுத்து மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    சீரியசாக இருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவரது வலது காலில் ரத்தம் உறைந்தது. இதனால் கால் விரல்களுக்கு ரத்தம் செல்லவில்லை. இதற்கும் மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக உடலுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    கால் துண்டிப்பு

    கால் துண்டிப்பு

    இதனால் வலது காலை துண்டிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர் நலமுடன் இருந்தார். இதை நடிகர் நிக் கோர்டரோவின் மனைவி அமண்டா கூட்ஸ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதுபற்றி அப்போது பரபரப்பாக செய்திகள் வெளியானது.

    நடிகர், இசைக் கலைஞர்

    நடிகர், இசைக் கலைஞர்

    இந்நிலையில் நிக் கோர்டரோ சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 41. இதுபற்றி அவர் மனைவி, அவர் ஒளியை போன்று இருந்தார். அவர் அனைவரின் நண்பராக இருந்தார். அவர் நம்ப முடியாத நடிகர், இசைக் கலைஞர். அவர் ஒரு தந்தையாகவும் கணவராகவும் குடும்பத்தை நேசித்தார் என்று தெரிவித்துள்ளார். நிக் கோர்டரோவின் மறைவை அடுத்து ஹாலிவுட் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor Nick Cordero dies at 41 from coronavirus complications
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X