Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போன வாரம் குட் பை சொன்னபோது.. இதுவே கடைசி என நினைக்கவில்லை.. நிவின் பாலி உருக்கம்!
சென்னை : பிரதாப் போத்தனின் மறைவுக்கு மலையான நடிகர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Recommended Video
மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70. அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நிலையில் தூக்கத்திலேயே அவரது உயிர்பிரிந்தது.
அவரது மறைவுக்கு தமிழ்,மலையாளம், தெலுங்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஓடிடியில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம்.. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்!

சிறந்த இயக்குநர்
பிரபல இயக்குனர் பரதன் மூலம் மலையாள சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பிரதாப், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை இயக்கிய பிரதாப் பேத்தன், முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

வித்தியாச விரும்பி
முதல் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து வெற்றிவிழா என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி பாராட்டை பெற்றது. அதே போல, முரட்டு வில்லனாக நடித்த நெப்போலியனை கிழக்கு சிவக்கையிலே என பாடவைத்து வெறு விதமான நெப்போலியனை காட்டி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நிவின் பாலி உருக்கம்
பிரதாப் போத்தன், உயிரிழந்ததை அடுத்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையான நடிகர் நிவின் பாலி தனது முகநூல் பக்கத்தில் பிரதாப் போத்தனுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு உருக்கான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், போன வாரம் குட் பை சொன்னபோது, கடைசியாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை பிரதாப் சார். ரோஷன் சேட்டனின் படத்தில் உங்கள் மகனாக உங்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் கவுரவமாகவும் இருந்தது. உங்கள் அப்பாவி புன்னகை, மின்னும் கண்கள் மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நான் எப்போதும் உன்னை நினைவில் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பினராயி விஜயன் இரங்கல்
பிரதாப் போத்தன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சினிமாவின் மாறிவரும் வழிகளுக்கு ஏற்ற தன்னிச்சையான மற்றும் தனித்துவமான நடிகர் என்று பிரதாப் போத்தனை அவர் புகழ்ந்தார். மேலும், அரசியல் மற்றும் சமூதாயத்திற்கு தேவையான சரியான கருத்துக்களை பிரதாப் வெளிப்படுத்தியதாக முதல்வர் கூறினார்.

நாளை இறுதிசடங்கு
பிரதாப் போத்தனின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, மணிரத்னம் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், கமல்ஹாசன், பிசி ஸ்ரீராம், ராஜூவ் மேனன், நடிகை கனிகா, நடிகை பூர்ணிமா,ஒய்ஜி மகேந்திரன், கருணாஸ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
-
LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது.. சாக்லேட் தடவிய கத்தியுடன் லியோ விஜய்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
-
தீபாவளி ரேஸில் ஜெயிலர் VS இந்தியன் 2... 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி - கமல்
-
வெளியானது பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்... ஏஆர் ரஹ்மான் வாய்ஸில் சிம்பு மாஸ் காட்டும் நம்ம சத்தம்