For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61

  |
  குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61- வீடியோ

  சென்னை: நடிகர் பார்த்திபன் இன்று 61வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

  நடிகர் பார்த்திபனைப் பற்றி அவருடைய பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால், அவர் 'பார்த்தி ஃபன்'. பார் என்றால் உலகம், ஃபன் என்றால் மகிழ்ச்சியூட்டுவது.

  ஆக உலகில் இருப்பவர்களின் வாழ்வில் தன் பேச்சின் மூலம் மகிழ்ச்சி எனும் தீபத்தை ஏற்றுபவர் என விளக்கமளிக்கலாம்.

  சாலிகிராமம்

  சாலிகிராமம்

  எட்டையபுரத்தில் பிறந்த பார்த்திபன் சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்தவர். பிறகு சென்னைக்கு வந்துவிட்டார். இயக்குனர் பாக்யராஜிடம் சினிமா கற்கும் பாக்கியம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். தென் தமிழகத்திலிருந்து வந்திருந்தாலும், கிராமப்பாங்கான முகமிருந்தாலும், கிராமங்களுக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்பார். எனக்குத் தெரிந்ததெல்லாம் 'சாலிகிராமம்' தான் என்று வழக்கமாக நக்கலுடன் கூறுவார்.

  தேசிய விருது

  தேசிய விருது

  ராணுவ வீரன், தாவணிக் கனவுகள், தூரம் அதிகமில்லை போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்ட ஆரம்பித்த பார்த்திபன், புதிய பாதை திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையாகவே திரைப்படங்களின் கதைக்கு புதிய பாதையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. அப்படத்தில் அவருடன் நடித்த சீதாவை திருமணமும் செய்துகொண்டார்.

  போட்டி

  போட்டி

  பார்த்திபன் இயக்கி நடித்த புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்ஃபுல், சுகமான சுமைகள், பொண்டாட்டி தேவை, குடைக்குள் மழை போன்ற படங்கள் பாராட்டப்பட்டன. இயக்குனராக வெற்றிபெற்ற பார்த்திபன், நடிகராகவும் பல படங்கள் ஹிட் அடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்களைத் தாண்டி வில்லனாக இருந்து கதாநாயகர்களாக மாறிய சரத்குமார், சத்யராஜ் போன்ற நடிகர்களின் திரைப்படம் வெளியாகி வெற்றிப்பெற்ற தொன்னூறுகளில் பார்த்திபனும் அவர்களுக்கு போட்டியான நடிகராக இருந்தார். கதாநாயகனுக்கென்று பிரத்தியேக பாணி எதும் இல்லாமல் பக்கத்துத் தெரு மனிதர் தோற்றத்தில் அவர் ஜெயித்ததுதான் ஆச்சரியம். அதேபோல் அஜித், பிரபுதேவா, முரளி போன்றவர்களுடன் இணைந்து நடிக்கவும் தவறவில்லை.

  வடிவேலு கூட்டணி

  வடிவேலு கூட்டணி

  குண்டக்க மண்டக்கவாக பேசி நகைச்சுவை செய்வதை பார்த்திபனின் பாணியாக மாற்றினார். அதற்கு உடந்தையாக இருந்தவர் வடிவேலு. பார்த்திபன் வடிவேலு கூட்டணி என்றால் நம்பி படத்திற்கு போகலாம் என திண்ணையில் உட்கார்ந்து பெருசுகளும் பேசிக்கொண்டனர். இவர்களின் கூட்டணியில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், உன்னருகே நானிருந்தால், புதுமை பித்தன், போன்ற படங்களில் இவரின் குண்டக்க மண்டக்க வசனத்தில் வடிவேல் சிக்கித் தவிக்கும் காட்சிகளைப் பார்த்தே குண்டக்க மண்டக்க என படம் எடுத்தார்கள். அதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

  கவிதை

  கவிதை

  பார்த்திபனின் கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மிகப் பிரபலமான ஒன்று. எளிமையான சொற்களைக் கொண்டு ஆழமான சிந்தனையுடன் நம்மை அணுகுகிறார்.

  "நீ அழிக்கக் காத்திருக்கிறது

  ஈர மணலில் என் பெயர்",

  நினச்சா பொறையேறனும்

  நிஜமா இருந்தா

  நீ செத்திருக்கனுமே இந்நேரம்!" போன்ற ஹைக்கூக்களைச் சொல்லலாம்.

  எப்போதுமே குண்டக்க மண்டக்க பேசிக்கொண்டு குதூகளிக்கும் பார்த்திபனுக்கு 61 என்பது வெறும் எண்ணிக்கைதானேத் தவிர வயதில்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்த்திபன்!

  English summary
  Actor Parthiban celebrates his 61st birthday today. He was a healthy competitor during Rajini, Kamal, Sathyaraj and Sarathkumar period.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X