41 மரணத்திற்கு பிறகும் மெளனம்.. வீராப்பு இருந்தால் மட்டும் அரசியல் செய்ய முடியாது.. பார்த்திபன்!
சென்னை: மெளனம்' படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட நடிகருர் இயக்குநருமான பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "41 மரணங்கள் நிகழும்போதும் மெளனத்தைக் கடைபிடிக்கும் மோசமான சூழலில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. வெறும் வீராப்பு இருந்தால் மட்டும் அரசியல் செய்ய முடியாது என்றார்
அதில் பேசிய பார்த்திபன், சினிமாவில் இருப்பவர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்பு இருந்தே ஆக வேண்டும். சினிமாவின் அடுத்த கட்டம் மக்களுக்கான சேவை தான். நான் இன்று சினிமாவில் ஒரு பெரிய நடிகராக இருப்பதற்கு காரணம் மக்கள் தான் . என்னுடைய அப்பா சோறு போட்டு வளர்த்து இருந்தாலும், புதிய பாதை திரைப்படத்தின் மூலம் நான் சினிமாவிற்கு வந்தேன். அதன் பிறகு எனக்கு மக்கள் நடிகர் என்று அங்கீகாரத்தை கொடுத்தார்கள்.

பார்த்திபன் பேச்சு: என்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தான் பார்த்திபன் மனிதநேய மன்றம் என்ற மன்றத்தை ஆரம்பித்தேன். அதன் பிறகு, சில நாட்கள் கழித்து சோற்றுக்கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து. படம் ஆரம்பித்தேன். அதன் வழியே அரசியல் மூலமாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தால், இங்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் வசதி தேவைப்படுகிறது, நிறைய பணம் தேவைப்படுகிறது. வெறும் வீராப்பு இருந்தால் மட்டும் இங்கு அரசியல் செய்ய முடியாது. அரசியல் என்பது பெரிய களம், அது யாருக்கும் தெரியாது என்றே நினைத்து அனைவரும் அதை புதைத்து வைத்து இருக்கிறோம். அப்படி புதைக்கப்பட்ட நேரத்தில் தான் எம்ஜிஆர் அவர்கள் அரசியலுக்கு வந்தார். ஆனால், தற்போது அரசியல் சூழ்நிலை அப்படி இல்லை.
தேவையில்லாத செய்தி: அதேபோல ஒரு பிரச்சனையை கிளறிவிட்டு அது பெரிய பிரச்சனை ஆவதை விட, இதுபோல உயிர்பலி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். கரூர் துயர சம்பவத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவிக் கொண்டு இருக்கின்றன. அதற்காக தனி ஆணையம் நியமித்து இருக்கிறார்கள், நீதிபதி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவரை கைது பண்ணுங்க, இவரை கைது பண்ணுங்க என்று சொல்வதில் நியாயம் இல்லை. அப்புறம் எதற்கு சட்டம் இருக்கிறது, நீதிபதி இருக்கிறாரகள். இப்படி வரும் செய்திகள் அனைத்தும் ஆத்து மீறிய செய்திகள் தான்.
மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம்: மௌனம் என்பது ஒரு சிறந்த மொழி, மௌனத்தை எப்போது எல்லாம் கடைப்பிடிக்கலாம் என்றால் 41 மரணங்கள் நடந்த பிறகும் மௌனத்தை கடைபிடிக்கும் அளவிற்கு ஒரு மோசமான சூழ்நிலையில் நம் வாழ்க்கையும், இந்த சமுதாயமும் இருக்கிறது. இந்த விஷயத்தில் எது சரி, தவறு என ஆராய்ச்சி ஆராய்வதற்கு பெரிய குழு இருக்கிறது. இதற்கு காரணம் அலட்சியமோ, சதியோ, சூழ்ச்சியா என்ற பிரச்சனைக்குள் போகாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் இது போன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இட்லி கடை' படத்தில் நான் நடித்திருப்பது பெருமை. இட்லி கடை அகிம்சையைப் பற்றி பேசுகிற ஒரு திரைப்படம். இன்றைய நாட்களில் வன்முறையை வைத்து படமெடுத்தால் அது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும். அப்படியான காலத்தில் அகிம்சையை நம்பி படம் எடுத்திருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள் என்றார்.


Click it and Unblock the Notifications











