Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒருவழியா ஓய்ந்தது மைக் பஞ்சாயத்து… தனது ஸ்டைலில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன் !
சென்னை : ரோபோ சங்கர் மீது மைக்கை வீசிய சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் அவருடைய ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இரவின் நிழல் படம், நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது.
இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.
அநாகரிகமாக நடந்து கொண்டேன்.. ஆனால், அதுக்காக செய்யல.. மன்னிப்பு கேட்டார் பார்த்திபன்!

இரவின் நிழல்
இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு முதல் பாடலை வெளியிட்டார். அப்போது மேடையில் நடிகர் பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உரையாடும் நிகழ்வின்போது, மைக் சரியாக வேலை செய்யவில்லை என பார்த்திபன் வேகமாக மைக்கை முன்வரிசையில் தூக்கி வீசியெறிந்தார். பார்த்திபனின் இந்த செயல் அனைவரையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது.

அகங்காரம் தேவையா?
இதையடுத்து நடிகர் பார்த்திபன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில், மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன்.... இவ்வளவு அகங்காரம் தேவையா? என பல யூடியூபில் செய்திகள் வெளிவந்தன. தூக்கி போட்டது மைக்... ஆனால், உடைந்தது என் மனசு என்று வருத்தத்துடன் பேசினார். வைரல் ஆக வேண்டும் என்பதற்காக நான் இதை செய்யவில்லை.

மன்னித்துவிடுங்கள்
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அது என் மனதிற்குள் பல சங்கடத்தை ஏற்படுத்தியது. மேடையில் நடந்த அந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன். சில தவறுகள் நடக்கும் போது அதை பின்னோக்கி சென்று சரி செய்ய முடியாது என்று வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
Recommended Video

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், அனைத்து சர்ச்சைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரோபோ ஷங்கரை நேரில் சந்தித்து அவருக்கு முத்தம் கொடுத்து தனது ஸ்டைலில் பதிவு ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில் மைக்கை கண்டுபிடித்தவர் ‘'ஈமைல் பெர்லினர்''... மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர்... மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ண பார்த்திபன்.. முடிவில் முத்தமிட்டவர் என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த பதிவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்