Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னியின் செல்வன் 500 கோடிக்கு ஐடியா கொடுத்த பார்த்திபன்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை : நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
அமரர் கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை காட்டியிருந்தனர்.
இதனிடையே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அமரர் கல்கியின் குடும்பத்தினருக்கு பொன்னியின் செல்வன் டீம் கொடுத்த சர்ப்ரைஸ்... ரசிகர்கள் பாராட்டு

பொன்னியின் செல்வன் படம்
அமரர் கல்கியின் சிறப்பான படைப்பாக போற்றப்படும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை திரையில் கொண்டுவர, எம்ஜிஆர், கமல்ஹாசன் என அனைவரும் பல முயற்சிகளை எடுத்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது. அவருக்கும் மூன்றாவது முயற்சியில்தான் இந்தப் படம் சாத்தியப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் 3வது முயற்சி
முன்னதாக விஜய், மகேஷ்பாபு உள்ளிட்டவர்களை கொண்டு மணிரத்னம் இந்தப் படத்தை முயற்சித்த நிலையில், படம் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்தப் படத்திற்கு ஏற்கனவே மிகச்சிறந்த வரவேற்பும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்த நிலையில், படக்குழுவும் மிகச்சிறந்த பிரமோஷனை படத்திற்கு கொடுத்தது. படத்தின் நாயகர்கள் மற்றும் நாயகிகள், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட அனைவரும் படத்திற்கான பிரமோஷனல் டூரில் கலந்துக் கொண்டனர்.

ரசிகர்கள் வரவேற்பு
இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் சிறப்பான வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் விமர்சனங்கள், வசூல் உள்ளிட்டவை படத்தின் மிகச்சிறந்த வெற்றியை வெளிக்காட்டி வருகிறது.

ரூ.400 கோடி வசூல்
படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்றைய தினம் அறுதியிட்டு தெரிவித்துள்ளது. இந்தப் படம் இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சாதனைகளை முறியடித்த படம்
இந்தப் படத்தின் வசூல் தமிழகத்தில் விக்ரம் உள்ளிட்ட படங்களை முந்தியுள்ளது. படம் சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 400 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் ஈட்டியுள்ள இந்தப் படம் மேலும் 100 கோடியை வசூலிக்க நடிகர் பார்த்திபன் தற்போது ஐடியா கொடுத்துள்ளார்.

ஐடியா கொடுத்த பார்த்திபன்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம் என்றும் எழுப்பினால் இன்னும் ஒரு 100 கோடி படத்திற்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்திற்கு கிடைத்துவரும் நெகட்டிவ் கமெண்ட்களும் விளம்பரமாக மாறியுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.